உடனடியாக மாற்று வீடு, ஒரு லட்சம் ரொக்கம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 27, 2021, 01:59 PM IST
உடனடியாக மாற்று வீடு, ஒரு லட்சம் ரொக்கம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு title=

சென்னை: திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசைமாற்று வாரியக்குடியிருப்புக் கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் அவர்களது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டட இடிபாடுகளில் மக்கள் யாரவது சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை உயிர்சேதம் குறித்து எந்தத்தகவலும் இல்லை. 

இந்நிலையில், திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் மற்றும் அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அதில் சென்னையை அடுத்த திருவொற்றியூரில், 1993 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இன்று காலை முழுமையாக இடிந்து விழுந்ததில், 24 வீடுகள் முழுவதுமாக சேதம் அடைந்த சம்பவம் குறித்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.

houses collapsed in Tiruvottiyur

உடனடியாக சம்பவ இடத்திற்கு சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஈடுபடுவார் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் ஒரு லட்சம் நிவாரண வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில், பழைய குடியிருப்புக்களை குறித்து விவரங்கள் சேகரிக்கவும், அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News