முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா நாளை அல்லது பிப்ரவரி 9-ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையைக் கலைக்கும் கோரிக்கையையும் ஆளுநர் ஏற்றுள்ளார்.
மேலும், அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுந்ர் வித்யாசாகர்.
— AIADMK (@AIADMKOfficial) February 6, 2017
TamilNadu Governor accepts hon Chief Minister Thiru O.Panneerselvam's resignation. pic.twitter.com/JG0mILRzuC
— V.K. Sasikala (@CMOTamilNadu) February 6, 2017