தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... பேருந்துகள் இயங்குமா? டக்குனு பதில் சொன்ன அமைச்சர்!

Transport Workers Strike Latest News: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை என்ன நடக்கும் என்பதை நாளை பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 8, 2024, 05:28 PM IST
  • பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும்
  • பொங்கல் பண்டிகைக்கு பின் 17,589 பேருந்துகள் இயக்கப்படும்.
  • தொமுச மற்றும் பல சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை.
தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... பேருந்துகள் இயங்குமா? டக்குனு பதில் சொன்ன அமைச்சர்! title=

Transport Workers Strike Latest News: தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர்,"வரும் ஜன. 12ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் (TN Pongal Special Buses) இயக்கப்படும். ஜன. 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்படும்.

சிறப்பு பேருந்துகள்

வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளில் இருந்து 6,300 பேருக்கு இயக்கப்படும். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் 

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் (SETC) கிளாம்பக்கத்தில் இருந்தும், இசிஆர் மார்க்கமாக செல்லக்கூடிய அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும்: அண்ணாமலை

பொங்கல் முடிந்து பயணிகள் சென்னை திரும்ப ஜன.16 முதல் 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 17589 பேருந்துகள் பொங்கலுக்கு பின் சொந்த ஊரில் இருந்து சென்னை வர இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்கலாம்" என தெரிவித்தார். மேலும், போக்குவரத்து கழகங்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்த நிலையில்,"கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் மீண்டும் பொங்கல் முடித்து சென்னைக்கு திரும்பும் போது கோயம்பேடு வராது; கிளாம்பக்கத்திற்கு தான் வந்து சேரும். 

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். தேவையான ஊழியர்களைக் கொண்டு போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். என்ன நடக்கப் போகிறது என்பதை நாளை பாருங்கள்" என்றார்.  முன்னதாக, போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி, நாளை முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடத்தப்பட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்தது. மேலும், தொமுச உள்ளிட்ட சில சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், சென்னையில் ஒரு சில பணிமனைகளில் இன்றே வேலைநிறுத்தம் தொடங்கியது. சிஐடியு, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு சிஐடியு, அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வடபழனி, ஐயப்பன்தாங்கல் பணிமனைகளில் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் நிறுத்திய பேருந்துகளை தொமுச இயக்குகிறது. பேருந்துகளை தொமுச இயக்குவதால் சென்னையில் பயணிகளுக்கு தற்போது வரை பாதிப்பில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முரசொலி நில சர்ச்சை: வழக்கின் தீர்ப்பு தேதியை குறித்த சென்னை உயர்நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News