சென்னை: கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பள்ளிகள் 2020 மார்ச் மாதம் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடுப்பூசி செலுத்திவிட்டு பள்ளிகளை திறந்துவிட்டன.
அந்த அடிப்படையில் தமிழக அரசு 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்தது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் பள்ளிகள் ஒருவாரம் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது என்பது குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh), அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுடன் ஆலோசனை நடத்தி ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளார்.
ALSO READ: சென்னை தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனோ தொற்று: ஒரு வாரம் பள்ளி மூடல்
அந்த ஆய்வறிக்கை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் (MK Stalin) ஒப்படைக்கப்பட்டது. பள்ளிகளை எப்போது திறக்கலாம்? திறந்தால் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன? பள்ளி திறப்பினால் ஏற்படவிருக்கும் சிக்கல்கள் என்ன என்பன அந்த அறிக்கையில் தெளிவாக இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
கல்வி அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் அறிக்கையை முதலமைச்சர் ஆராயந்து பார்த்து பள்ளிகள் திறப்பு தொடர்பான முடிவை அறிவிப்பார் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் (TN Schools) சுமூகமாக நடைபெற்று வருவதால் விரைவில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று தமிழ்நாட்டில் 1,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,38,668 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR