விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் -உதயநிதி ஸ்டாலின்!

திமுக இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jul 6, 2019, 03:30 PM IST
விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் -உதயநிதி ஸ்டாலின்!

திமுக இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடைபெற்றது.

கடந்த வியாழனன்று உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற முதல் கூட்டமான இதில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

திமுக இளைஞரணி துணை செயலாளர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தாயகம் கவி, ஆர்.டி சேகர், அசன் முகமது ஜின்னா, ஜோயல், பைந்தமிழ் பாரி, ஆ.துரை உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். தமிழக அமைப்பாளர்கள் மட்டுமல்லாது புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பிற மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்நிலையில் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “இது அறிமுக கூட்டம் மட்டுமே. இதில் நான் பேசியதைவிட அமைப்பாளர்களை அதிகம் பேசவைத்து கேட்டுக்கொண்டேன். அவர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்பு ஆகியவை பற்றி மனம் விட்டுப் பேசினோம். இந்த கூட்டம் அரசியலில் எனக்கு சிறப்பான அனுபவம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “என் மீது ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்புகளை செயல்பாடுகள் மூலமாக நிறைவேற்றுவேன். திமுக இளைஞரணியை பலப்படுத்த உறுப்பினர் சேர்க்கை பணியின் இலக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்லும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.” எனவும் தெரிவித்தார்.

More Stories

Trending News