என் காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் மட்டும் செல்லாதீர்கள் - ஈபிஎஸ்ஸை கலாய்த்த உதயநிதி

எனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் மட்டும் சென்றுவிடாதீர்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டப்பேரவையில் சிரிப்பலையை உருவாக்கியது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 21, 2022, 05:11 PM IST
  • எடப்பாடி பழனிசாமியை கலாய்த்த உதயநிதி
  • உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி
  • எடப்பாடி பழனிசாமி காரில் ஏற முயன்ற உதயநிதி
என் காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் மட்டும் செல்லாதீர்கள் - ஈபிஎஸ்ஸை கலாய்த்த உதயநிதி title=

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்துவருகிறது. சில நாள்களுக்கு பேரவையிலிருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கார் என்று நினைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற சென்றார். அருகில் இருந்தவர்கள், ‘இது உதயநிதி கார்’ என கூறியதும் சுதாரித்துக்கொண்டு தனது காரில் ஏறி சென்றார்.

அதேபோல் உதயநிதி சட்டப்பேரவையிலிருந்து வெளியே வந்தபோது தனது கார் என்று நினைத்து ஈபிஎஸ் காரில் ஏற சென்றேன். உள்ளே ஜெயலலிதா புகைப்படம் இருந்ததை பார்த்து சுதாரித்துக்கொண்டேன் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரிடம் கூறிய வீடியோ வைரலானது.

Edappadi Palanisamy

இந்நிலையில் இன்றைய மானிய கோரிக்கை விவாதத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கடந்த ஆண்டு நான் பேசும்போது எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்துவிட்டீர்கள். நேற்றும் வெளியேறிவிட்டீர்கள். இன்று நான் பேசும்போது உள்ளே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி.

நீங்கள் வெளிநடப்பு செய்தாலும் என் காரில்தான் ஏற செல்கிறீர்கள். நீங்கள் மட்டும் இல்லை நானும் 3 நாள்கள் முன்பு உங்க காரில் ஏற சென்றேன்.

மேலும் படிக்க | ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்... வேதனைப்படும் ராமதாஸ்

அடுத்த முறை தாராளமாக என் காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஆனால் அந்தக் காரை எடுத்துக்கொண்டு கமலாலயத்திற்கு மட்டும் சென்றுவிடாதீர்கள்" என பேசினார்.

O Panneerselvam

அவரது இந்தப் பேச்சை அடுத்து சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ‘எங்கள் கார் எப்போதும் எம்ஜிஆர் மாளிகைக்கு மட்டும்தான் செல்லும்’ என்றார்.

மேலும்  படிக்க | மோடியை முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டிருக்க வேண்டும் - இயக்குநர் பேரரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News