"சிவி சண்முகத்தின் டவுசரை கழட்டியவர்கள்...." - திமுக எம்எல்ஏ பதிலடி

சிவி சண்முகத்தின் தரம் தாழ்ந்த விமர்சனத்துக்காக, அவரின் டவுசரை விழுப்புரம் மக்கள் கடந்த தேர்தலில் கழட்டியவர்கள் என திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் விமர்சித்துள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Jan 3, 2022, 05:26 PM IST
  • சி.வி சண்முகத்தை கடுமையாக விமர்சித்த திமுக எம்.எல்.ஏ லட்சுமணன்
  • விழுப்புரம் மக்கள் சண்முகத்தின் டவுசரை கழட்டியவர்கள்
  • அவரின் அவதூறு பேச்சுக்கு மக்கள் தோல்வியை கொடுத்துள்ளனர்
"சிவி சண்முகத்தின் டவுசரை கழட்டியவர்கள்...." - திமுக எம்எல்ஏ பதிலடி title=

விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயது வரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ லட்சுமணன் தொடங்கி வைத்தார். அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் தடுப்பூசி முகாம் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

ALSO READசட்ட அமைச்சருடன் சிறைச்சாலைக்குள் நுழைந்த திமுகவினர்- Video

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.ஏல்.ஏ லட்சுமணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சரையும், அரசு அதிகாரிகளையும் அவர் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக குற்றம்சாட்டினார். சிவி சண்முகத்தின் இத்தகைய பேச்சுக்காக கடந்த தேர்தலில் விழுப்புரம் மக்கள் அவரின் டவுசரை கழட்டியதாகவும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் சாடினார்.

ALSO READ | பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பம் நடுவதில் கட்சியினர் போலீசாரிடையே தள்ளுமுள்ளு

விழுப்புரம் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றிருந்த பொன்முடியை 2011 ஆம் ஆண்டு தோற்கடித்த சி.வி.சண்முகம், 2016 ஆம் தேர்தலிலும் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 3வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அந்த தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளராக போட்டியிட்ட லட்சுமணனிடம் தோல்வியை தழுவினார். இப்போதைய திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து திமுகவுக்கு சென்றவர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News