கோவை: தண்ணீர் தேடி பழங்குடியின கிராமத்திற்கு குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள் வீடியோ வைரலாகிறது.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான 24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
மேலும், வனப்பகுதிகளில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன. ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
மேலும் படிக்க | ரூட்ல கிராஸ் பண்ணறீங்க; எச்சரிக்கும் யானையின் வைரல் வீடியோ
பல இடங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் மனித - வன உயிரின மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதற்கு வனத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டும் அந்த நிதியும் முறையாக செலவிடுப்படுவதில்லை
எனவும் வன உயிரின ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தடாகம் பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள நம்பர்.24 வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய மருதம் கரை கீழ்பதி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை தேடி வந்த குட்டிகளுடன் கூடிய காட்டு யானைகள் தொட்டியில் நீர் அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் நேற்று தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நீதிபதிகள் ஆய்வு செய்ததால் தொட்டிகளில் தற்போது தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதாக கூறும் வன அலுவலர்கள், வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த தண்ணீர் தொட்டிகளை பராமரித்து வெயில் காலங்களில் தொடர்ந்து தண்ணீர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் பூனை -வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR