சாலையில் போடப்படும் விதவிதமான கோடுகள் எதற்கு?

சாலையின் குறுக்கே விதவிதமான கோடுகள் போடப்பட்டு இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.எதற்காக அவ்வாறு கோடுகள் போடப்படுகிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2021, 04:06 PM IST
சாலையில் போடப்படும் விதவிதமான கோடுகள் எதற்கு?  title=

சாலையில் வாகனத்தில் பயணிப்பவர்கள் விதிமுறைகளை பின்பற்றி தான் பயணிக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  பலவகையான சாலை விதிமுறைகள் உள்ளன,அதாவது தலைக்கவசம் அணிய வேண்டும், சாலையில் போடப்பட்டிருக்கும் கோட்டிற்கு இடதுபுறமாக தான் செல்ல வேண்டும், பயணத்தின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது, வாகனத்தின் ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும் போன்றவை.  ஆனால் சாலையின் குறுக்கே விதவிதமான கோடுகள் போடப்பட்டு இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.எதற்காக அவ்வாறு கோடுகள் போடப்படுகிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.

road

சாலையின் குறுக்கே ஜீப்ர கிராசிங் போடப்பட்டு இருந்தால் நடந்து செல்பவர்கள் சாலையைக் கடப்பதற்கு இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதேபோன்று வாகனங்கள் ஜீப்ர கிராசிங்  இருக்கும் இடத்தில் மெதுவாக செல்ல வேண்டும் என்பது விதிமுறை.

*சாலையின் நடுவே எந்த இடைவெளியும் இல்லாமல் நீளமாக வெள்ளை கோடு போடப்பட்டு இருந்தால், அந்தப் பகுதியில் வேகமாக சென்று முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தை முந்திச் செல்லக்கூடாது என்று அர்த்தம்.

*சாலையின் நடுவில் வெள்ளை கோடுகள் இடைவெளி விட்டுவிட்டு போடப்பட்டு இருந்தால் இடது புறமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வலது புறம் வந்து முன்னால் செல்லும் வாகனத்தை கவனமாக முந்திச் செல்லலாம் என்று அர்த்தம்.

*மஞ்சள் கோடு ஒன்று நீளமாக சாலையின் நடுவே வரையப்பட்டு இருந்தால் அது வெளிச்சம் குறைவான பகுதி என்றும் அத்தியாவசியம் என்றால் பாதுகாப்பாக முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்லலாம் என்றும் அர்த்தம்.

*இரண்டு மஞ்சள் கோடுகள் நீளமாக வரையப்பட்டிருந்தால் அந்தப் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்றும் அந்த பகுதியில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல முயற்சிக்கக் கூடாது என்றும் அர்த்தம்.

ALSO READ மழையை துல்லியமாக கணக்கிட உதவும் புதிய தொழில்நுட்பம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News