எதற்காக ரஜினி ஆளுநரை சந்தித்தார்? அண்ணாமலை விளக்கம்!

நடிகர் ரஜினி ஆளுநரை சந்தித்ததிலோ, அரசியல் பேசியதிலோ எந்த தவறும் இல்லை என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Aug 10, 2022, 01:52 PM IST
  • சில தினங்களுக்கு முன்பு ரஜினி தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார்.
  • இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
  • அரசியல் குறித்து பேசியதாக ரஜினி தெரிவித்து இருந்தார்.
எதற்காக ரஜினி ஆளுநரை சந்தித்தார்? அண்ணாமலை விளக்கம்! title=

சென்னை நீலாங்கரை கடற்கரையில் தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் மூவர்ண படகுப் பேரணியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 25 படகுகளில் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் பகுதியில் தேசிய கொடியை ஏந்தியவாறு பேரணியாக வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவதைக் கூட அரசியலாக்கும் திருமாவளவனின் அரசியல் கீழ்த்தரமானது, அரசியல் கட்சி தலைவர் பிற்போக்குத் தனமாக யோசிக்கிறார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.  ஜம்மு - காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசியக்கொடியைத் தான் வரும் 15-ம் தேதி சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஏற்ற உள்ளோம்.  பலரையும் சந்தித்து பேசுவது தான் ஆளுநரின் மரபு.  நடிகர் ரஜினி உட்பட பலரையும் தொடர்ச்சியாக ஆளுநர் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறார்.  காவிரி பிரச்சனை உட்பட தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து குரல் தந்து வருகிறார்.  ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியதில் என்ன தவறு? திமுகவின் ஆக்ஸிஜனில் உயிர் வாழும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட சிலர் இதை தவறு என்கின்றனர்.

Rajini

மேலும் படிக்க | போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது: முதல்வர் முக ஸ்டாலின்

அரசியல் இல்லாத வாழ்க்கை ஏது? இரண்டு மனிதர்களை திட்டிக்கொள்வது தான் அரசியலா? எதற்காக பிற்போக்குத்தனமாக யோசிக்க வேண்டும்? மகளிருக்கு இலவச பிங்க் நிற பேருந்துகள் கூட அரசியல் தான்.  சமுதாயத்தில் உள்ள விஷயங்களை பற்றி பேசியிருப்பது தான் அரசியல், கம்யூனிஸ்டுகளுக்கு வேலை இல்லை, திமுகவின் ஆக்ஸிஜனைப் பிடித்துக்கொண்டு சுற்றி வருகிறார்கள்.  ரஜினி ஆளுநரை சந்தித்ததிலோ, அரசியல் பேசியதிலோ எந்த தவறும் இல்லை.  ரஜினி ஆளுநரை சந்தித்ததை கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்குகின்றன, இது தவறு.

ஒரு ஜனநாயக நாட்டில் இரண்டு குடிமகன்கள் அரசியல் பேசுவதற்கு உரிமையில்லையா? பால்வளத்துறையில் நடைபெற்று வரும் ஊழல்களைப் பற்றி அந்த துறை அமைச்சரே உளறிவிட்டார்.  திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் ஆற்றில் மணல் அள்ளுங்கள் சொன்னவர் அமைச்சர் செந்தில் பாலாஜி.  அந்த வரிசையில் தற்போது, அமைச்சர்  மா.சுப்பிரமணியன் இணைந்துள்ளார்.  ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது சரியானது அல்ல.  இப்படி அமைச்சர்கள் உளறுவதன் மூலம் முதல்வரை  முட்டுச்சந்தில் நிறுத்திவிடுவார்கள் என்றார்.

மேலும் படிக்க | மனைவியை வெட்டிவிட்டு போலீஸில் சரணடைந்த கணவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News