World AIDS Day: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் எய்ட்ஸ் பேரணி

World AIDS Day: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் எய்ட்ஸ் பேரணி நடைபெற்று வருகிறது...கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 1, 2022, 01:37 PM IST
  • உலக எய்ட்ஸ் தினம் இன்று
  • தமிழகத்தில் எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு
  • மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்த எய்ட்ஸ் பேரணி
World AIDS Day: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் எய்ட்ஸ் பேரணி title=

நாமக்கல்: உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 500க்கும்‌ மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். பொதுமக்களிடம் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் -1ம்‌ தேதி உலக எய்ட்ஸ்  தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள எயிட்ஸ் நோய் மீதான சமத்துவமின்மையை ஒழித்து நோயை முடிவுக்கு கொண்டு வருவதே என்ற மையக் கருத்தை அடிப்படையாக வைத்து எயிட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அதன்படி தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சார்பில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அண்ணா சிலை அருகே இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் எயிட்ஸ் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கல்லூரி மாணவ மாணவிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். இந்த பேரணியானது மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணி நடைபெற்றது.

மேலும் படிக்க | Gujarat Election: குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு: அதிருப்தி தெரிவிக்கும் ஆம் ஆத்மி கட்சி

முன்னதாக எயிட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகன ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டியும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார். 

திண்டுக்கல்லில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் துவக்கி வைத்தார். திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலவலகத்தில் உலக எய்ட்ஸ்தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு சமபடுத்துதல் இயக்கத்தில் கையெழுத்திட்டும் மற்றும் ஆட்டோ களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், பலூன்களை பறக்க விட்டும், இந்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் மாணவிகள், தனியார் கல்லூரி மாணவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நிலைய சாலை,  ஏ எம் சி சாலை , பழைய நீதிமன்ற சாலை வழியாக மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது

மேலும் படிக்க: Baba Ramdev Apology : பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து - மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News