Bank FD: மாத்தி யோசி மாமூ! எப்படி யோசிச்சா உங்க முதலீடு சீக்கிரமா பல மடங்காகும்!

Investment Tips For Quick Returns : உங்களிடம் இருக்கும் பணத்தை எந்தவித ரிஸ்கும் இல்லாமல் அதிகரிக்க வேண்டுமா? முதலீடுகளில் அபாயம் இல்லாத முதலீடுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2024, 10:22 PM IST
  • வருமானத்தை கொடுக்கும் முதலீடுகள்!
  • முதலீடுகளின் வகைகள்
  • எந்த முதலீடு அதிக லாபம் கொடுக்கும்?
Bank FD: மாத்தி யோசி மாமூ! எப்படி யோசிச்சா உங்க முதலீடு சீக்கிரமா பல மடங்காகும்! title=

நம்மிடம் இருக்கும் பணத்தை சரியாக முதலீடு செய்தால் அது பல மடங்காகுக்ம். ஆனால், இருக்கும் பணத்தை முதலீடு செய்வதில் எந்த விதமான ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால், FD திட்டத்தில் பணத்தைப் போட்டு வைத்தால் பம்பர் ரிட்டர்ன் கிடைக்கும். ஆனால் இதற்காக நீங்கள் FD இல் முதலீடு செய்யும் முறையை மாற்ற வேண்டும். அதோடு, பணத்தை பல மடங்காக அதிகரிக்க நீண்ட கால இலக்கை வைத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்துடன் கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உங்கள் முதலீட்டு விருப்பத்தில் நிலையான வைப்பு எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் (FD) கண்டிப்பாக இருக்க வேண்டும். FD இல் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்.

ஆனால் இதில் முதலீடு செய்தால், அதிலிருந்து கிடைக்கும் வட்டி, நீண்ட காலத்திற்கு பணவீக்கத்தை வெல்லும் அளவுக்கு அதிகமாக இல்லை. எனவே, பெரும்பாலான நிதி வல்லுநர்கள் FD தவிர போர்ட்ஃபோலியோவில் பரஸ்பர நிதிகள் போன்ற திட்டங்களைச் சேர்க்க வெண்டும் என பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் செய்யும் முதலீட்டில் எந்த விதமான ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, FD திட்டத்தை பம்பர் ரிட்டர்ன் மெஷினாக மாற்றும் வழியைத் தெரிந்துக் கொள்வோம். FD எப்படி பெரிய அளவில் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

பணத்தை பல மடங்காக்கும் உத்தி

வங்கி எஃப்டியில் இருந்து பெரிய பணம் சம்பாதிக்க, பணத்தை ஒன்றாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் பல்வேறு தவணைக்காலங்களில் பல FDகளில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, ரூ.5 லட்சத்தை முதலீடு செய்வதாக இருந்தால், 5 லட்ச ரூபாய்க்கு FD பண்ணாமல், 1, 2, 3, 4, 5 வருஷங்களுக்கு என வெவ்வேறு காலகட்டங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கு 5 FD செய்யலாம்.

மேலும் படிக்க | வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!

இப்படி வெவ்வேறு காலகட்டத்தில் செய்யும் ஃபிக்சட் டெபாசி, ஆண்டுதோறும் ஒன்று என முதிர்ச்சியடையும். போதுமான பணப்புழக்கம் கிடைக்கும். முதலாண்டில் முதிர்ச்சியடையும் முதல் பிக்சட் டெபாசிட்டை மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு டெபாசிட்டாக செய்யுங்கல்.

இரண்டாவது FDஐ மீண்டும் டெபாசிட் செய்யுங்கல். இரண்டாம் ஆண்டில் முதிர்ச்சியடையும். அடுத்த ஐந்து வருடங்களுக்கு அதையும் சரி செய்யுங்கள். இந்த வழியில், உங்கள் FD ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொன்றாக முதிர்ச்சியடையும். அது அடுத்த 10 ஆண்டுகளில் FD மூலம் உங்கலுக்கு நல்ல தொகை கிடைக்கும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் திட்டம்
இந்த FD  நுட்பம், ஓய்வு பெற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. FD முதிர்ச்சியடைந்த பிறகு, அவர்கள் அதன் வட்டித் தொகையைப் பயன்படுத்திக் கொண்டு, மீதமுள்ள பணத்தை மீண்டும் டெபாசிட் செய்யலாம். இந்த வழியில், FD அவ்வப்போது முதிர்ச்சியடையும் போது, ​​தொடர்ந்து வட்டி மூலம் பணம் கிடைப்பதை செலவுக்கு வைத்துக் கொள்ளலாம். அவர்களின் டெபாசிட் தொகை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | திமுக ஆட்சியில் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை - ராமதாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News