டிஜிட்டல் வளர்ச்சியினால், ஒருவரின் ஆதார் உள்ளிட்ட தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன. பான் கார்டு, ஆதார் கார்டு டிஜிட்டல் பிரிண்டுகளை மற்றவர்களுக்கு பகிரும்போது, அவர்கள் அல்லது அவர்களுடன் பழகும் நபர்கள் தங்களின் மோசடிகளுக்கு பிறரின் இத்தகைய டிஜிட்டல் ஆவணங்களை பயன்படுத்தி மோசடியை அரங்கேற்றுகின்றனர். குறிப்பாக, சமூகவிரோதிகள் செய்யும் மோசடிகளுக்கு அடிப்படையாக இருக்கும் சிம் கார்டுகளை பிறரின் ஆவணங்களை வைத்தே வாங்குகின்றனர்.
மேலும் படிக்க | உளவு பார்க்க பயன்படுத்தப்படும் Air Tag - அதிர வைக்கும் டெக் உலகம்
இதனால், இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய ஆவணங்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா?, மோசடியாக போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருக்கிறதா? என்பதையெல்லாம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதெல்லாம் ஒரு வேளையா? என யோசித்தால் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்குவதை தவிர்க்க முடியாது. மறுபுறம், நம் ஆதாரை பயன்படுத்தி வேறொருவர் சிம் கார்டு வாங்கியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? என்ற கேள்வி இருக்கும். இதுவரை உங்களுக்கு அப்படியான கேள்வி இருந்தால், இங்கே பதில் இருக்கிறது.
யாரேனும் ஒருவர் உங்கள் ஆதாரை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியிருந்தால், நீங்கள் எளிமையாக கண்டுபிடித்துவிடலாம். அதற்கு நீங்கள் முதலில் TAFCOP என்ற இணையதளத்துக்கு செல்லுங்கள். அங்கு உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஒடிபி உங்கள் மொபைலுக்கு வரும். அந்த ஓடிபியை நீங்கள் மீண்டும் அந்த இணையதள பக்கத்தில் பதிவிட்டால், அடுத்த நொடியே உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டுகளின் லிஸ்ட் வரும். அதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால், அந்த இணையப் பக்கத்திலேயே ரிப்போர்ட் செய்யலாம்.
மேலும் படிக்க | Hacking: புதிய வழியில் வாட்ஸ்அப் ஹேக்கிங் - உஷார் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR