ஏர்டெல்லின் புதிய மிஸ்டு கால் அலர்ட் அம்சம்! தெரிந்து கொள்ளுங்கள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மிஸ்டு கால் அலர்ட் அம்சம். அதனுடைய முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 7, 2023, 02:34 PM IST
ஏர்டெல்லின் புதிய மிஸ்டு கால் அலர்ட் அம்சம்! தெரிந்து கொள்ளுங்கள் title=

ஏர்டெல் நிறுவனம் புதியதாக மிஸ்டு கால் அலர்ட் அம்சத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த அம்சத்தின் மூலம் உங்களுக்கு வந்த அழைப்புகள் விவரத்தை தெரிவிக்கும். நெட்வொர்க் வரம்புக்கு வெளியே இருக்கும்போது கூட, உங்களுக்கு வந்த அழைப்பு குறித்த விவரத்தை ஏர்டெல்லின் இந்த புதிய அம்சம் கூறும். ஜியோ வாடிக்கையாள்களுக்கு இந்த அம்சம் ஏற்கனவே இருக்கிறது என்றாலும், ஏர்டெல் நிறுவனம் இப்போது தான் இந்த அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. 

மிஸ்டுகால் அலர்ட்!

நீங்கள் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் என்றால், நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் செயலிக்குள் செல்ல வேண்டும். அந்த செயலியில் அனைத்து அழைப்பு பதிவுகளையும் பார்க்கலாம். ஜியோ வாடிக்கையாளர்கள் பொறுத்தவரை மிஸ்டு கால் தகவலை குறுஞ்செய்தி வாயிலாகவே பார்த்துக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க | தினசரி 2 ஜிபி டேட்டா.. 160 நாட்கள் வேலிடிட்டி.. BSNL அசத்தல் திட்டம்!

இப்போது நீங்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலிக்குள் சென்றுவிட்டால், அங்கு curated by you ஆப்சனுக்கு செல்ல வேண்டும். அதில்'ஸ்மார்ட் மிஸ்டு கால் அலர்ட்ஸ்' அம்சத்தில் இந்தத் தகவலைப் பார்க்கலாம்.

எப்போது பயனுள்ளதாக இருக்கும்?

உங்கள் ஃபோனில் நெட்வொர்க் இல்லாதபோது அல்லது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். தொலைபேசியில் நெட்வொர்க் திரும்பியதும், நீங்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் உள்நுழைந்து உங்களை யார் அழைக்க முயற்சித்தார்கள் என்பதைப் பார்க்கலாம். இந்த அம்சம், உங்கள் ஃபோன் நெட்வொர்க் இல்லாதபோது, ​​உங்கள் ஃபோனுக்கு மிஸ்டு கால்கள் வந்த எண்களை மட்டுமே காண்பிக்கும்.

எந்த வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்?

அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். முதலில் நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். ஏர்டெல் தேங்ஸ் செயலிக்குள் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு உள்ளே சென்றவுடன், மேற்கூறிய வழிமுறையின்படி மிஸ்டுகால் அலர்ட் தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | சிறிய முதலீடு .... கை நிறைய லாபம் ! ஏழைகளுக்கான 4 வழிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News