ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் திடீரென ஓடிடி சந்தாவை மலிவு விலை பிளானில் இருந்து நீக்கியுள்ளது. இதனை நம்பி இத்தனை நாள் ஹாட்ஸ்டார் சந்தாவை பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி வருத்ததைக் கொடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ரீசார்ஜ் ஒரு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டமாகும். இதில் பயனர்கள் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெற்று வந்தனர். இருப்பினும், இப்போது இந்த திட்டத்தில் இந்த அம்சம் வாடிக்கையாளர்களாகிய உங்களுக்கு கிடைக்காது.
ஏர்டெல் நிறுவனத்தின் 399 ரூபாய் திட்டத்தைப் பொறுத்தவரையில் 3 மாதங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைத்தது. இப்போது நிறுவனம் இந்த நன்மையை நீக்கியுள்ளது. மாறாக, பயனர்கள் Airtel Xstream Playக்கான அணுகலைப் பெறுகின்றனர். இருப்பினும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ஏர்டெல் நிறுவனத்தின் பிற திட்டங்களில் கிடைக்கிறது. ஹாட்ஸ்டார் சந்தா வேண்டும் என நினைப்பவர்கள் ரூ.499, ரூ.839 மற்றும் ரூ.3359 திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை! ஆகஸ்ட் 31-க்குள் இத பண்ணிடுங்க!
ஏர்டெல் ரூ.399 பிளான்
ஏர்டெல்லின் ரூ.399 திட்டத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றாகும். இதில், பயனர்கள் தினசரி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினசரி இலவச எஸ்எம்எஸ் மற்றும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவற்றைப் பெற்றனர். இது வழக்கம்போல் கிடைக்கும் என்றாலும் ஓடிடி சந்தா மட்டும் இனி இருக்காது. அதேநேரத்தில், பயனர்கள் Airtel Xstream Playக்கான அணுகலைப் பெறுவார்கள்.
ஜியோ வழியில் ஏர்டெல்
டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் பல உள்ளடக்கங்கள் இப்போது ஜியோ சினிமாவில் கிடைக்கின்றன. அதனைப் போலவே ஏர்டெல் நிறுவனம் தனது சேவைகளை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே நன்மைகளுக்கு மாற்றியுள்ளது. இந்த தளத்தில் 15 OTT இயங்குதளங்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள். மேலும், Sony LIV, Eros Now, Lionsgate Play, Manorama MAX, Hoichoi, Chaupal, epicON, ShemarooME, Docubay, Hungama மற்றும் பிற தளங்கள் அடங்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அதே திட்டத்தை நீங்கள் விரும்பினால், நிறுவனம் உங்களுக்கு ரூ.499, ரூ.839 மற்றும் ரூ.3359 திட்டங்களில் அணுகலை வழங்குகிறது. மூன்று மாத சந்தா ரூ.499 மற்றும் ரூ.839 திட்டங்களில் கிடைக்கும். அதே நேரத்தில், ரூ.3359 திட்டத்தில், நிறுவனம் ஒரு வருட சந்தாவை வழங்குகிறது.
மேலும் படிக்க | ரயில் கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம், எப்படி? உடனே படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ