ரூ 269 ரீசார்ஜ் பிளான்..தினமும் 2 ஜிபி டேட்டா..அள்ளி வீசும் பிஎஸ்என்எல்

பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் நிலையான நெட்வொர்க் சேவையை இந்தியா முழுக்க தடையில்லாமல் வழங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இப்போது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் சென்னை பயனர்களுக்காக வழங்கி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 2, 2023, 10:18 AM IST
  • BSNL ரூ.269 ரீசார்ஜ் திட்டம்.
  • 28 நாள்கள் இந்த திட்டம் செல்லுப்படியாகும்.
  • 2ஜிபி டேட்டா வரம்பு கிடைக்கிறது.

Trending Photos

ரூ 269 ரீசார்ஜ் பிளான்..தினமும் 2 ஜிபி டேட்டா..அள்ளி வீசும் பிஎஸ்என்எல் title=

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். என்ன தான், Airtel, Jio, Vi என்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினாலும், இன்னும் ஏராளமான பொதுமக்கள் BSNL சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் நிலையான நெட்வொர்க் சேவையை இந்தியா முழுக்க தடையில்லாமல் வழங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இப்போது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் சென்னை பயனர்களுக்காக வழங்கி வருகிறது.

மேலும் படிக்க | ரூ 666 ரீசார்ஜ் பிளான்..ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 269 ஆக இருக்கும். பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் 100 நாட்கள் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது.

மற்ற நனமைகள் என்ன?
இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்களும் கிடைக்கிறது. இதுதவிர ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், சேலஞ்சஸ் அரீனா, லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சர்வீஸ், லோக்துன் மற்றும் ஜிங் போன்ற பல சலுகைகள் இதில் கிடைக்கிறது.

எனக்கு எப்படி ரீசார்ஜ் செய்வது?
பிஎஸ்என்எல் இன் இந்த ரூ 269 திட்டத்தை நீங்கள் https://www.bsnl.co.in/ இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

இதற்கிடையில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட போட்டிப்போட்டுக் கொண்டு BSNL குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க | 2023 ஸ்பெஷல் ரீசார்ஜ்..தினமும் 2.5ஜிபி, இப்படி ஒரு ஆஃபரா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News