பிஎஸ்என்எல் சூப்பர் ஹிட் பிளான்! 35 நாள் வேலிடிட்டி வெறும் ரூ.3 செலவழித்தால் போதும்

BSNL’s super hit recharge plan offers : BSNL நிறுவனத்தின் சூப்பர்ஹிட் ரீச்சார்ஜ் பிளானில் உங்கள் மொபைலுக்கு நாள் ஒன்றுக்கு வெறும் 3 ரூபாய் செலவில் ரீச்சார்ஜ் செய்து 35 நாட்கள் வேலிடிட்டியை பெறலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

Written by - S.Karthikeyan | Last Updated : May 28, 2024, 04:36 PM IST
  • பிஎஸ்என்எல் சூப்பர் ஹிட் ரீச்சார்ஜ் பிளான்
  • 107 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் போதும்
  • இரண்டாம் சிம் யூசர்களுக்கு ஏற்ற பிளான்
பிஎஸ்என்எல் சூப்பர் ஹிட் பிளான்! 35 நாள் வேலிடிட்டி வெறும் ரூ.3 செலவழித்தால் போதும் title=

பிஎஸ்என்எல் 107 ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 35 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கும் மேலான வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. இது BSNL நிறுவனத்தின் மலிவு விலை திட்டமாகும். பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது. BSNL வாடிக்கையாளர்களான நீங்கள் உங்கள் சிம்மை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க நினைத்தால், அதற்கு ஒரு விலை குறைவான ரீச்சார்ஜ் பிளானை தேடுகிறீர்கள் என்றால் இந்த திட்டம் உபயோகமாக இருக்கும்.

பிஎஸ்என்எல்லின் ரூ.107 ரீசார்ஜ் திட்டம்

BSNL இன் ரூ.107 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 35 நாட்கள். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 3 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அதாவது, நாள் ஒன்றுக்கு வெறும் மூன்று ரூபாய் மட்டும் செலவழித்தால் போதும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டம் BSNL இன் மலிவான திட்டங்களில் ஒன்றாகும். டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, அதன் வேக வரம்பு 40kbps ஆக குறைகிறது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு மேல் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் 200 நிமிட இலவச குரல் அழைப்பு சேவையைப் பெறுவார்கள். தவிர, BSNL Tunes சேவையும் இந்த திட்டத்தில் 35 நாட்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | டேட்டாவும் ஜாஸ்தி... இணைய வேகமும் அதிகம்... ஆனால் விலை குறைவு - பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்

யாருக்கு இந்த பிஎஸ்என்எல் திட்டம் சிறந்தது?

குறைந்த செலவில் சிம்மை செயலில் வைத்திருக்கும் திட்டத்தை எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் 200 நிமிட அழைப்பு இலவசம். இந்த திட்டம் உங்கள் சிம்மை 35 நாட்களுக்கு செயலில் வைத்திருக்கும். இதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பு. குறைந்த டேட்டா கொண்ட மலிவான திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்தத் திட்டம் உங்களுக்கு உதவும். பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம், அதன் ரூ.99 பிளானை விட சிறந்தது.

பிஎஸ்என்எல் 425 ரூபாய் பிளான்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நீண்ட நாட்களுக்கு தேவையான பிளானை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றாலும், அதற்கு ஏற்ற பிளான் இருக்கிறது. கிட்டதட்ட 425 நாட்களுக்கு செல்லுபடியாகும் பிளான் ஒன்றையும் பிஎஸ்என்எல் அறிவித்திருக்கிறது. இந்த பிளானின் விலை 2,398 ரூபாய். வேலிடிட்டி காலம் முழுவதும் தினசரி 2ஜிபி என மொத்தம் 850 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளும் அதேநேரத்தில் அன்லிமிட்டெட் அழைப்பு வசதியும் இந்த பிளானில் இருக்கிறது. 

மேலும் படிக்க | குஷியில் Vi வாடிக்கையாளர்கள்... 130ஜிபி கூடுதல் டேட்டா இலவசம் - ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News