இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்த நடவடிக்கையை அடுத்து, அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்ப ஆரம்பித்துள்ளனர்.
பிஎஸ்என்எல் (BSNL) இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து, தனது 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்துகிறது. நாடு முழுவதும் மிக விரைவில் 4ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்த பிஎஸ்என்எல், உடனடியாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாக 4ஜி நெட்வொர்க் டவர்களை நிறுவி, தனது பணியை துரிதப்படுத்தியது.
ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ள தொலைத்தொடர்புத் துறை
தற்போது பிஎஸ்என்எல் 4ஜி சில மாநிலங்களில் இயங்கி வரும் நிலையில், விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இலக்கு. இந்நிலையில், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை (DoT), தனது X தளத்தில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளது. DoT தனது சமூக வலைதள பதிவில் "தன்னிறைவு பெற்ற இந்தியாவின் 4G-BSNL... விரைவில் உங்களுக்கு அருகிலுள்ள அவுட்லெட்டுகளில்" என பதிவிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளது.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் நீண்டநாட்களுக்கு ராக்கெட் வேகத்தில் வேலை செய்ய... சில டிப்ஸ்
ஆகஸ்ட் 13 அன்று எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்
அதிக வேக 4ஜி இண்டர்நெட்டிற்கான ஆதாரத்தை காட்டும் வகையில், தொலைத்தொடர்புத் துறை பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில் ஆகஸ்ட் 13 தேதி காட்டப்பட்டுள்ளது. விரைவில் 4ஜி சேவை விரிவுபடுத்தப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கிய அறிவிப்பிற்காக மக்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 6ஜி சோதனை திட்டம்
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். நாடு வேகமாக 5ஜி சோதனையை ஆரம்பித்துவிட்டதாகவும், தற்போது 6ஜி தொழில்நுட்பத்தை சோதனை முறையில் உருவாக்கி வருவதாகவும் கூறினார். அரசு தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் அறிவிப்பு
சமீபத்தில் அக்டோபர் இறுதிக்குள் சுமார் 80,000 4ஜி டவர்களும், 2025 மார்ச் மாதத்துக்குள் சுமார் 21,000 5ஜி டவர்களும் நிறுவப்படும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்து. மேலும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவையும் சோதனை கட்டத்தில் உள்ளதாக கூறிய நிலையில், 5G பற்றிய விவாதம் முழு வீச்சில் தொடங்கியது. 4ஜி அறிமுகம் ஆன 6 முதல் 8 மாதங்களுக்குள் 5ஜி சேவையைத் தொடங்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பிரதமர் மோடியும் 6ஜி தொடர்பாக முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சில மாநிலங்களில் BSNL 4G சேவை இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் உங்கள் போனை சார்ஜ் செய்ய... சில டிப்ஸ் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ