பழுதடைந்த SUV-ஐ மாற்றிக் கொடுத்த Ecstatic XUV700 மஹிந்திரா

பழுதான XUV700 SUV காரை மாற்றிக் கொடுத்த மஹிந்திரா நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுகள்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 02:04 PM IST
  • பழுதடைந்த காரை மாற்றிக் கொடுத்த நிறுவனம்
  • இது மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு
  • வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றிய கார் நிறுவனம்
பழுதடைந்த SUV-ஐ  மாற்றிக் கொடுத்த Ecstatic XUV700 மஹிந்திரா title=

மஹிந்திரா & மஹிந்திரா கார் உற்பத்தி நிறுவனம், சமீபத்தில் XUV700 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 25 லட்சம் ரூபாய் SUV பிரிவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிய சொகுசுக் கார் இது.

ADAS (Advanced Driver Assistance Systems) போன்ற பல பிரிவு முதல் அம்சங்களை வழங்கும் இந்த கார், ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி கார் ஓட்டுநர் விபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது. இருப்பினும், ஒரு வாடிக்கையாளர் சமீபத்தில் வாங்கிய மஹிந்திரா XUV700 SUV காரில் ADAS பிரச்சனை ஏற்பட்டதாக புகார் கூறியதை அடுத்து அவரது கார் மாற்றிக் கொடுக்கப்பட்டது. 

இப்படிப்பட்ட நிகழ்வு அபூர்வமாகவே நடைபெறும் என்பதால், மஹிந்திரா நிறுவனத்தின் செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட வாடிக்கையாளர், மஹிந்திராவுடன் விற்பனைக்குப் பிந்தைய அனுபவத்தை வெளிப்படுத்தும் வீடியோவையும் வெளியிட்டார். 

அந்த வாடிக்கையாளர்  வாங்கிய வாகனத்தில் ADAS அமைப்பில் (Problem in ADAS). எனவே, தான் கார் வாங்கிய டீலரிடம் அவர் சென்று முறையிட்டார். பிரச்சனைக்கான காரணத்தை டீலராலும் கண்டறிய முடியவில்லை. எனவே, மஹிந்திராவின் சேவைக் குழுவிடம் விஷயம் சென்றது. அங்கும் சில நாட்கள் கார் பரிசோதிக்கப்பட்டாலும், தீர்வு காண முடியவில்லை.

READ ALSO | கனமழை கரணமாக NASCAR கோப்பை மோட்டார் கார் பந்தயம் ஒத்திவைப்பு

வாடிக்கையாளருக்கு இதனால், காலதாமதம் ஏற்பட்டது. எனவே, அவர் தான் வாங்கிய காரை திரும்பப் எடுத்துக் கொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு டீலரிடம் கேட்டார். இப்போது இதுபோன்ற நிகழ்வுகள் வாகனத் துறையில் மிகவும் பொதுவாக நடக்கின்றன. 

வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களில் பிரச்சனை ஏற்பட்டால், அதை முறையிட்ட பிறகு தீர்வில் மகிழ்ச்சியடையவில்லை என்றால், பெரும்பாலும் பணத்தைத் திரும்பக் கேட்கிறார்கள். பெரும்பாலான பிராண்டுகள் மற்றும் அவற்றின் டீலர்ஷிப்கள் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாளத் தவறினாலும், மஹிந்திரா ஒரு படி மேலே சென்று வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய XUV700ஐ வழங்கியுள்ளது.

சுவாரஸ்யமான செய்தியாக அவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்ட கார் கருப்பு நிற SUV என்பது வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால், அவர் விரும்பிய மிட்நைட் பிளாக் XUV700 டெலிவரி தாமதமானதால், சில்வர் XUV700 காரை வாங்கிக் கொண்டார். 

கார் வாங்கிய வாடிக்கையாளருக்கு தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதாம். அதை அவர் பகிர்ந்து கொண்டார். அவர் வேறு பல கார்களையும் வாங்க யோசித்து நீண்ட பரிசீலனை செய்துள்ள்ளார்.  ஆனால் XUV700ஐப் போன்ற சிறந்த கார் அவருக்கு தெரியவில்லையாம்!

Read Also| கார் பந்தய வீரர் ஜெய் சென்னை MMRT களத்தில்

மஹிந்திரா XUV700, ஆகஸ்ட் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து,  75,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று, எந்த நேரத்திலும் அதிகம் விற்பனையாகும் மஹிந்திராவின் கார்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதிகரித்த தேவை மற்றும் சிப் பற்றாக்குறையால், குறிப்பிட்ட ரக கார்கள் மற்றும் வண்ணங்களுக்காக வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. 

SUVயின் விலை மற்றும் தொழில்நுட்பத் தொகுப்பு சிறப்பானதாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். எனவே, காரை வாங்குபவர்கள் மாற்று விருப்பத்திற்கு செல்வதை விட மஹிந்திரா XUV700 காருக்காக காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள்.

மஹிந்திரா XUV700, இந்த ஆண்டின் SUV மற்றும் ஆண்டின் சிறந்த கார் பிரிவில் Zee ஆட்டோ விருது 2021ஐயும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் அட்டகாசமான கார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News