புதிய லுக்கில் அறிமுகம் ஆகிறது OnePlus 11: விவரம் உள்ளே

OnePlus 11 5G: OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பு வரவுள்ளதாக ஒன்பிளஸ் பிராண்ட் அறிவித்துள்ளது. இதன் அறிமுக தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2023, 10:57 AM IST
  • நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 11 போனை புதிய பாணியில் வழங்க உள்ளது.
  • ஒன்பிளஸ் 11 5ஜி இந்தியாவில் புதிய மாறுபாட்டைக் கொண்டுவரத் தயாராக உள்ளது.
  • OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பு வரவுள்ளதாக ஒன்பிளஸ் பிராண்ட் அறிவித்துள்ளது.
புதிய லுக்கில் அறிமுகம் ஆகிறது OnePlus 11: விவரம் உள்ளே title=

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் (OnePlus) நிறுவாம், மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது. நிறுவனம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 11 போனை புதிய பாணியில் வழங்க உள்ளது. ஒன்பிளஸ் 11 5ஜி இந்தியாவில் புதிய மாறுபாட்டைக் கொண்டுவரத் தயாராக உள்ளது. OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பு வரவுள்ளதாக ஒன்பிளஸ் பிராண்ட் அறிவித்துள்ளது. இதன் அறிமுக தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. 

சீனாவில், இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பான OnePlus 11 5G ஸ்மார்ட்போன் ஜூபிடர் ராக் (Jupiter Rock) என்று அழைக்கப்படுகிறது. மேலும் அதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த தொலைபேசியின் வடிவமைப்பு வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

OnePlus 11 5G Marble Odyssey லிமிட்டட் எடிஷன்

OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பின் தோற்றம் சீனாவில் உள்ள ஜூபிடர் ராக் பதிப்பைப் போல உள்ளது. பின் பேனலின் நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிற ஷேட்களைக் கொண்டுள்ளது. தற்போது அறிமுகம் ஆகவுள்ள ஸ்மார்ட்போன் பதிப்பும் ஸ்டாண்டர் ஆப்ஷனிலிருந்து வேறுபட்டது. 

மார்பிள் ஒடிஸி லிமிடெட் எடிஷன் ஒரு இயற்கையான அமைப்புடைய (நேசுரல் டெக்ஸ்சர்) பதிப்பாகும். இதில் மைக்ரோகிரிஸ்டலின் ராக் மெடீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஒவ்வொரு பகுதியும் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பைப் போல அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் நீர்ப்புகா மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு (வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஆண்டி-பாக்டீரியல்) அம்சங்கள் கொண்டதாகும்.

மேலும் படிக்க | AC: ஏசியில் சூடான காற்று வருகிறதா? ஆன் செய்ததும் இதை பண்ணிடுங்க!

OnePlus 11 5G: விவரக்குறிப்புகள்

OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பின் முக்கிய விவரக்குறிப்புகள் மாறாமல் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் QHD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் புதுப்பிப்பு வீதம் 120Hz ஆகும். இதன் உச்ச பிரகாசத்தின் அளவு 1,300 nits ஆகும். இந்த மொபைல் போனில் 50MP பிரதான சென்சார், 48MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32MP டெலிஃபோட்டோ யூனிட் ஆகியவற்றின் ஹாசல்பிளாட்-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

OnePlus 11 5G ஆனது ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC இல் இயங்குகிறது. மேலும் இந்த போன் 16GB RAM மற்றும் 256GB சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 5,000mAh பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் ஆதரிக்கப்படுகிறது.

கூடுதல் தகவல்:

அமேசானில் ஒன்பிளஸ் போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள்

OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனில் 50MP பிரதான கேமரா மற்றும் Mediatek Dimensity 1300 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, போனில் 4500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.28,999. அமேசானில் வாங்கினால், 2000 ரூபாய்க் நேரடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு மட்டுமே.

OnePlus 10R 5G போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகம் உள்ளது. இது 50MP பிரதான கேமரா, 6.7-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரியுடன் MTK D8100 Max செயலி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனின் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது. HSBC வங்கி கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க | IRCTC: பணம் செலுத்தாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்! எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News