போலி ஐடி மூலம் சிம் கார்டு பயன்படுத்துகிறீர்களா? 6 லட்சம் கனெக்ஷன் கட் - அரசு எடுத்த மெகா ஆக்ஷன்

போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6.8 லட்சம் மொபைல் இணைப்புகளை தொலைத்தொடர்புத் துறை (DoT) கண்டறிந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2024, 08:28 AM IST
  • ஆன்லைன் மோசடிக்கு எதிராக நடவடிக்கை
  • போலி சிம் கார்டுகளை கண்டுபிடிக்கும் அரசு
  • 6.8 லட்சம் கனெக்ஷன் மீண்டும் சரிபார்ப்பு
போலி ஐடி மூலம் சிம் கார்டு பயன்படுத்துகிறீர்களா? 6 லட்சம் கனெக்ஷன் கட் - அரசு எடுத்த மெகா ஆக்ஷன் title=

மோசடி செய்பவர்கள் மக்களை சிக்கவைத்து பணத்தை ஏமாற்றும் பல ஆன்லைன் மோசடி நிகழ்வுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏமாற்றுபவர்கள் கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் மக்களை ஏமாற்றி சிக்க வைக்கின்றனர். பெரும்பாலும் மோசடி செய்பவர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான வழியை மக்களுக்குச் சொல்வதோடு, ஆரம்பத்திலேயே பணத்தையும் கொடுத்து, மக்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த வலையில் சிக்கியவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்கின்றனர். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் போலி சிம் கார்டுகளையே பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த போலி சிம்கள் போலி ஆவணங்கள் மூலம் பெறப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது மத்திய தொலைத்தொடர்பு துறை.

KYC க்காக 6 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் எண்களை அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளது. இந்த மொபைல் இணைப்புகள் 60 நாட்களில் மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும். போலி சிம்களை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6.8 லட்சம் மொபைல் இணைப்புகளை தொலைத்தொடர்பு துறை (DoT) அடையாளம் கண்டுள்ளது. இந்த போலி ஆவணங்களில் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ் ஆகியவை பெரும்பாலும் இருக்கின்றன. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மிச்சமாகும்...!

மத்திய அரசு ஆணை

இந்த 6.8 லட்சம் மொபைல் எண்களை உடனடியாக மீண்டும் சரிபார்க்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு (டிஎஸ்பி) தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த எண்களை 60 நாட்களுக்குள் மீண்டும் சரிபார்க்க வேண்டும். சரிபார்ப்பு செய்யப்படாவிட்டால், இந்த எண்கள் தடுக்கப்படும் (Block).

இது எப்படி நடந்தது?

மத்திய அரசு துறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பின் காரணமாக அரசாங்கம் இந்த போலி சிம் கார்டுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. போலி அடையாளங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது.

ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மொபைல் இணைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொலைத்தொடர்பு துறை விரும்புகிறது. அதனால் மீண்டும் சரிபார்ப்பை துறை செய்து வருகிறது. இது ஆன்லைன் மோசடி போன்ற வழக்குகளை குறைக்க உதவும். இப்போது சரிபார்க்கப்படும் 6.8 லட்சம் சிம் கார்டுகளின் ஆவணங்களில் போலியாக கண்டறியப்படும் சிம் கார்டுகள் குறித்து அடுத்தக்கட்ட விசாரணையும் தொடங்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் கூகுள் செய்யும் பெரிய சம்பவம்... ஆப்பிளுக்கு ஆப்பு? - முழு பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News