வாட்ஸ்அப்பில் எமோஜிகள் மூலம் ரியாக்ட் செய்வது எப்படி?

பேஸ்புக் மெசேஞ்சர் போன்று இனி வாட்ஸ்அப்பிலும் மெசேஜ்களுக்கு எமோஜிகளை பயன்படுத்தி ரியாக்ட் செய்யலாம்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 4, 2022, 04:32 PM IST
  • வாட்ஸ்அப் புது அப்டேட்டில் எமோஜிகள் மூலம் ரியாக்ட் செய்து கொள்ளலாம்.
  • இது முதலில் வெப் வாட்ஸ்அப்களுக்கு மட்டுமே வருகிறது.
வாட்ஸ்அப்பில் எமோஜிகள் மூலம் ரியாக்ட் செய்வது எப்படி?  title=

வாட்ஸ்அப் நீண்ட நாட்களாகவே தனது பயனாளர்களுக்கு மற்ற செயலிகளுக்கு போட்டியாக பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது.  அந்த வகையில் தற்போது மேக் ஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய அம்சத்தை வழங்கியுள்ளது.  அதாவது அவர்கள் இனிமேல் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலம் ரியாக்ட் செய்து கொள்ளலாம்.  எமோஜிகள் மூலம் மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்யக்கூடிய மற்ற செயலிகளான பேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் ஆப்பிள் ஐமெசேஜ் ஆகியவற்றில் செய்து போல் இனி பயனர்கள் வாட்ஸ்அப்பிலும் ஒருவர் அனுப்பும் மெசேஜுக்கு எமோஜிகள் மூலம் பதிலளிக்கலாம்.

மேலும் படிக்க | அவசர காலத்தில் உயிரைக் காக்க உதவும் ஸ்மார்ட்போன் - இதை செய்யுங்கள்!

வாட்ஸ்அப் பீட்டா டிராக்கரான வாபீட்டாஇன்ஃபோவால் கூற்றுப்படி, வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷன் 2.2208.1, பயனர்கள் மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் புதிய வழியை பற்றிய சில தகவல்களை கொண்டிருப்பதாகத் கூறுகிறது.  இருப்பினும் இந்த அம்சமானது பொது பீட்டா சோதனையாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.  இந்த அம்சத்திற்கு 'ரியாக்ட் டு மெசேஜ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வாபீட்டாஇன்போவால் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டில் உள்ளது போல, ஒரு மெசேஜின் மீது வலது பக்கம் கிளிக் செய்வதன் மூலம், அந்த மெசேஜுக்கு பதிலளிக்க முடியும்.  கடந்த வாரம் டெஸ்க்டொப் வெர்ஷனை அப்டேட் செய்தவர்களுக்கு வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வழங்கியது, இதன் மூலம் ஒரு மேசஜூக்கு நம்மால் விரைவில் பதிலளிக்க முடிகிறது.

web
 
இந்த அம்சமானது "லைக்," "காதல்," "சிரிப்பு," மற்றும் "ஆச்சரியம்" போன்ற ரியாக்ஷன் எமோஜிகளைக் கொண்டுள்ளது.  தனி ஒரு நபருக்கு சாட் செய்யும்பொழுது மட்டும் தான் இந்த அம்சம் செயல்படுமா என்றால் இல்லை, வாட்ஸ்அப் குழுவில் செய்யப்படும் மெசேஜ்களுக்கும் எமோஜிகள் மூலம் ரியாக்ட் செய்யலாம்.  இந்த அம்சம் அனைவருக்கும் எப்போதும் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் கிடைக்கவில்லை, வளர்ச்சி நிலையில் இருக்கும் அம்சம் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | TikTok-ஐ மிஸ் செய்யும் பயனர்களுக்கு Facebook அளித்த பரிசு: புதிய அம்சம் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News