5G ஸ்மார்ட் போனுடன் இந்திய சந்தைக்கு திரும்பும் HTC!

67% வருவாய் உயர்வைப் பதிவு செய்த சில நாட்களில், தைவானிய கைபேசி தயாரிப்பாளரான HTC இந்தியாவில், 2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் புதிய 4G ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2020-ஆம் ஆண்டில் 5G சாதனங்களுடன் மீண்டும் வருவதற்கு முற்படுகிறது.

Last Updated : Sep 17, 2019, 05:33 PM IST
5G ஸ்மார்ட் போனுடன் இந்திய சந்தைக்கு திரும்பும் HTC! title=

67% வருவாய் உயர்வைப் பதிவு செய்த சில நாட்களில், தைவானிய கைபேசி தயாரிப்பாளரான HTC இந்தியாவில், 2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் புதிய 4G ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2020-ஆம் ஆண்டில் 5G சாதனங்களுடன் மீண்டும் வருவதற்கு முற்படுகிறது.

நெரிசல்கள் நிறைந்த கைப்பேசி சந்தையில் போட்டி பிராண்டுகள் புதிய மாடல்களை பரவலாக அறிமுகப்படுத்தியுள்ளதால், தைவானின் கைபேசி சந்தையில் HTC தொடர்ந்து விவேகமான பொருத்துதல் மூலோபாயத்துடன் வலுப்படுத்திக் கொள்ளும் என்று HTC தைவான் தலைவர் டேரன் சென் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த ஸ்மார்ட்போன்களின் பிளேயர், அதன் மெய்நிகர் ரியாலிட்டி (VR) மற்றும் 5G நெட்வொர்க்குகளுடன் ஒருங்கிணைத்து அதன் ஸ்மார்ட்போன்களை போட்டிகளிலிருந்து வேறுபடுத்துவதற்கு முற்படும். மேலும் அதன் Viveport VR உள்ளடக்க தளத்தை மேம்படுத்த டெலிகாம் ஆபரேட்டர்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் சென் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, HTC கைபேசி தயாரிப்பாளர் கடந்த வாரம் ஆகஸ்ட் மாதத்தில் 23.5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாக அறிவித்தது. இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.

இருப்பினும், எல்லாமே நிறுவனத்திற்கு சாதகமாகத் தெரிந்தாலும், ஒட்டுமொத்த வருவாய் ஆண்டு அடிப்படையில் 47.1 சதவீதம் குறைந்து வருவதாக GSMArena அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா சந்தையிலிருந்து வெளியேறிய HTC, கடந்த மாதம் HTC கார்ப்பரேஷனின் உள்ளூர் உரிமதாரரான InOne ஸ்மார்ட் டெக்னாலஜி மூலம் நாட்டில் "Wildfire X"-ஐ அறிமுகப்படுத்தியது.

HTC-ன் திருப்பத்திற்கு உதவும் இந்த ஸ்மார்ட்போனில் 12MP + 8MP + 5MP என மூன்று பின்புற கேமரா லென்ஸ்கள் மற்றும் ஒரு பெரிய பிக்சல் பிரதான கேமரா கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாதனம் 6.22 இன்ச் HD+ IPS வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவை 88.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

Trending News