இந்த மொபைல்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது.. இன்னும் 30 நாள்கள் தான் டைம்!

Whatsapp Latest News: இன்னும் ஒரு மாதத்திற்கு பின், ஒரு சில ஸ்மார்ட்போன்கள் வாட்ஸ்அப் முற்றிலும் வேலை செய்யாது என அறிவித்துள்ளது. எந்தெந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வராது என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 25, 2023, 02:34 PM IST
  • அந்த மொபைலகளின் பட்டியல் தொகுப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கையை செய்துள்ளது.
  • அக். 24ஆம் தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது.. இன்னும் 30 நாள்கள் தான் டைம்! title=

Whatsapp Latest News: வாட்ஸ்அப் செயலி தனது பயனர் அனுபவம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த புதிய அப்டேட்களை அந்நிறுவனம் தொடர்ந்து கொண்டு வந்த வண்ணம் உள்ளது. Android, iOS மற்றும் Web உள்ளிட்ட அனைத்து வாட்ஸ்அப் பதிப்புகளும் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் புதிய சிஸ்டம் அப்டேட்களை பெறுகின்றன. இருப்பினும், புதிய இயக்க முறைமைகளுக்கான (OS) புதிய அப்டேட்களுடன், பழைய அல்லது காலாவதியான இயக்க முறைமைகளுக்கான (OS) ஆதரவையும் வாட்ஸ்அப் நீக்குகிறது.

அக். 24ஆம் தேதிக்கு பின்

இது புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் புதுமையான அனுபவத்தை வழங்குவதிலும் வாட்ஸ்அப் கவனம் செலுத்த அனுமதிக்கிறது எனலாம். மேலும், வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு பிறகு ஆண்ட்ராய்டு OS வெர்ஷன் 4.1 மற்றும் அதற்கும் பிந்தைய OS வெர்ஷன் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை நிறுத்துவதாக வாட்ஸ்அப் சமீபத்தில் அறிவித்தது. அதாவது இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.

எந்தெந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு பின் இயங்காது என்ற பட்டியல் இந்த தொகுப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள மொபைலகளில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால், அதை அப்டேட் செய்வது அல்லது மொபைலை மாற்றுவது குறித்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும். பழைய மொபைல்களில் புதிய ஆப்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் ஆதரவு பெரும்பாலும் இருக்காது. இது உங்கள் ஃபோனைப் பாதுகாப்பற்றதாகவும் பயன்படுத்துவதற்கு வசதியற்றதாகவும் மாற்றலாம். 

மேலும் படிக்க | 6GB RAM மொபைல்... அதுவும் ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாக - இத்தனை சிறப்பமசங்களா?

OS வெர்ஷனை கண்டுபிடிப்பது எப்படி?

அதாவது, உங்கள் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு OS வெர்ஷன் 4.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்குகிறதா என்பது உங்களுக்கு கண்டுபிடிக்க இந்த வழியை கைக்கொள்ளுங்கள். உங்கள் சாதனத்தில் உள்ள Settings மெனுவிற்குச் சென்று சரிபார்க்கலாம். Settings > About Phone > Software Information என்ற ஆப்ஷனுக்குச் செல்லவும். உங்களின் மொபைல் எந்த ஆண்ட்ராய்ட் பதிப்பில் வருகிறது என்பதை 'Version' வகையின் கீழ் பட்டியலிடப்படும்.

ஆதரவு அகற்றப்பட்டால் என்ன நடக்கும்?

பழைய OS அமைப்பால் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் முன்கூட்டியே தெரிவிக்கும். அப்கிரேட் செய்ய அந்த பயனர்களுக்கு வாட்ஸ்அப் பலமுறை தொடர்ந்து நினைவூட்டும். பயனர்கள் தங்கள் சாதனத்தை புதுப்பிக்கவில்லை என்றால், வாட்ஸ்அப் அவர்களின் சாதனத்தில் வேலை செய்வதை நிறுத்திவிடும். அதாவது, அவர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ, அழைப்புகளைச் செய்யவோ அல்லது பெறவோ அல்லது வேறு எந்த வாட்ஸ்அப் அம்சத்தையும் பயன்படுத்தவோ முடியாது.

இந்த மொபைல்களில் இனி வாட்ஸ்அப் வராது

- நெக்ஸஸ் 7 (Android 4.2 அப்டேட் செய்யக்கூடியது)
- சாம்சங் கேலக்ஸி நோட் 2
- HTC One
- சோனி எக்ஸ்பீரியா இசட்
- LG Optimus G Pro
- சாம்சங் கேலக்ஸி S2
- சாம்சங் கேலக்ஸி நெக்ஸஸ்
- HTC சென்சேஷன்
- Motorola Droid Razr
- சோனி எக்ஸ்பீரியா எஸ்2
- மோட்டோரோலா ஜூம்
- சாம்சங் கேலக்ஸி Tab 10.1
- ஆசஸ் ஈ பேட் டிரான்ஸ்ஃபார்மர்
- ஏசர் ஐகோனியா டேப் A5003
- சாம்சங் கேலக்ஸி எஸ்
- HTC டிசையர் HD
- LG Optimus 2X
- சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க்3

மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் பெஸ்ட் 5G மொபைல்கள்... தள்ளுபடிகளை பயன்படுத்திக்கோங்க மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News