ஐ.பி.எல் 2024 தொடர் மார்ச் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஐ.பி.எல் 2024 சீசனுக்கு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஜியோ சினிமா உள்ளது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் ஜியோ சினிமா பயனர்களுக்கு இலவச ஸ்ட்ரீமிங் செய்கிறது.
இந்நிலையில், செயலிக்கான ஸ்ட்ரீமிங் இலவசமாக இருந்தாலும் டேட்டா பயன்படுத்த வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
மேலும் படிக்க | ஐபிஎல் ரசிகர்களுக்கு வெறித்தனமான ஆப்பர்... ஜியோவின் முரட்டு ரீசார்ஜ் திட்டங்கள்!
ஜியோ ஐ.பி.எல் ப்ளான்
ஜியோ இரண்டு கிரிக்கெட் திட்டங்கள் உள்ளது. ரூ.444 திட்டம் மொத்தம் 100 ஜிபி டேட்டாவை 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.667 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 150 ஜிபி டேட்டாவை கொடுக்கும். இந்தத் திட்டங்களில் டேட்டா பலன்கள் மட்டுமே அடங்கும். மேலும் ஏற்கனவே உள்ள டேட்டா திட்டங்களுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா ஆகியவை வழங்குகிறது. இது ஏர்டெல் திட்டத்தை விட சற்று விலை உயர்ந்ததாகத் தோன்றலாம். இருப்பினும், ஜியோவின் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது மற்றும் மாதத்திற்கு ரூ.333 செலவாகும்.
ஏர்டெல் திட்டம்
ஏர்டெல்லின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்தத் திட்டம் ஐபிஎல் 2024 சீசன் முழுவதும் நீடிக்கும். போனஸாக, இந்த திட்டம் ஒரு இலவச பிரைம் வீடியோ சந்தா மற்றும் அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டாவை கொடுக்கும்.
வி.ஐ திட்டம்
வி.ஐ அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தில் திரைப்படம் மற்றும் டிவி சந்தாக்களுடன் இரவில் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை வழங்குகிறது. (நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை) இந்த இலவச டேட்டாவை வழங்குகிறது. வி.ஐ-ன் ரூ.699 ரீசார்ஜ் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நாளொன்றுக்கு இன்னும் அதிகமான டேட்டாவை நீங்கள் விரும்பினால், ரூ.475 திட்டத்தைத் தேர்வு செய்யவும். இது ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது ஆனால் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ