ஜியோ vs வோடோஃபோன் vs ஏர்டெல்: சிறந்த ப்ரீபெய்டு திட்டங்கள்!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000க்குள் சிறப்பான ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2022, 02:24 PM IST
  • ஜியோ ரூ.1000க்குள் சலுகையை வழங்குகிறது.
  • ஏர்டெல் ரூ.839க்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகள் தருகிறது.
  • வோடாபோன் ரூ.699க்கு தினசரி 3 ஜிபி டேட்டா வழங்குகிறது.
ஜியோ vs வோடோஃபோன் vs ஏர்டெல்: சிறந்த ப்ரீபெய்டு திட்டங்கள்!  title=

நவீன யுகத்திற்கு ஏற்ப ஒவ்வொன்றிலும் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.  அந்த வகையில் நம் வாழ்க்கையின் அத்திவாசிய தேவையாக மாறிப்போன மொபைல் போன் நெட்ஒர்க்குகளிலும் பல்வேறு மேம்பாடுகள் செய்து வரப்படுகிறது.  ஆரம்ப காலகட்டத்தில் மொபைல் நெட்ஒர்க்குகள் குறிப்பிட்ட அளவு கால்கள் மற்றும் மெசேஜ்களை செய்ய மட்டுமே அனுமதித்து வந்தது.  ஆனால் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இந்த யுகத்திற்கு ஏற்ப, மக்களின் தேவைகளையும் கருத்திற்கொண்டு மொபைல் நெட்ஒர்க்குகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை போட்டி போட்டு வழங்கி கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | ஜியோ மாஸ் திட்டங்கள்! ரூ.300-க்கு கீழ் இவ்வளவு திட்டங்கள்

தற்போது இலவச டேட்டாக்கள், அன்லிமிடெட் கால்கள் மற்றும் அன்லிமிடெட் மெசேஜ்கள் என பல்வேறு விதமான சலுகைகளை ஒவ்வொரு நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.  பல்வேறு விலைகளில் இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது, அதில் நமக்கு வேண்டிய ரீசார்ஜ் திட்டத்தை நாம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.1000க்குள் ப்ரீபெய்டு திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்த திட்டங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டாலும், ஏராளமான நன்மைகளையும் தருகிறது.  

ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது, மைஜியோ ஆப்பில் தவறுதலாக நீங்கள் சில திட்டங்களை தேர்ந்தெடுக்க நேரிடும்.  ஜியோ பயனாளரான நீங்கள் ரூ.1000க்குள் திட்டங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால் ஜியோ உங்களுக்கு அந்த சலுகையை வழங்குகிறது.  ரூ.719க்கு உள்ள ஜியோவின் ப்ரீபெய்டு திட்டமானது 84 நாட்கள் வேளிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா என மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கிறது.  இது ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற ஜியோ ஆப்கள் பலவற்றை தருகிறது.  அடுத்ததாக ரூ.479க்கு உள்ள ப்ரீபெய்டு திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா என மொத்தமாக 84 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ஏர்டெல் சில ரீசார்ஜ் சலுகைகளுடன் அமேசான் ப்ரைம் சபஸ்க்ரிப்ஷனையும் 30 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்குகிறது.  ரூ.839க்கு உள்ள ப்ரீபெய்டு திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன்  அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் இது ஹெலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்றவற்றின் சபஸ்க்ரிப்ஷனையும் வழங்குகிறது.  அடுத்ததாக ரூ.719க்கு உள்ள ப்ரீபெய்டு திட்டமானது  தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன்  அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள், இலவசமாக 1 மாதத்திற்கு அமேசான் ப்ரைம் வீடியோ சபஸ்க்ரிப்ஷனையும் வழங்குகிறது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை போல வோடாபோனும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.  ரூ.699 க்கு உள்ள ப்ரீபெய்டு திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 3 ஜிபி டேட்டா  அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் வழங்குகிறது.  மேலும் இது வீகெண்ட் டேட்டா ரோல் ஓவர், பிங்கே ஆல் நைட் டேட்டா, விஐ மூவிஸ்  மற்றும் டிவி போன்ற நன்மைகளை வழங்குகிறது.  அதேபோல ரூ.539க்கு தினசரி 2 ஜிபி டேட்டா,  அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் போன்றவற்றை வழங்குகிறது.

மேலும் படிக்க | ஐபிஎல் இலவசமாக பார்க்க ஜியோவின் எந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யலாம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News