கண்ணா கார் வாங்க ஆசையா? 1.25 லட்சம் தள்ளுபடியில் விற்பனையாகும் மகேந்திரா கார்

மஹிந்திரா இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரையில் XUV400, Marazzo, XUV300, Bolero மற்றும் Bolero Neo உள்ளிட்ட வாகனங்களுக்கு தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது.     

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 9, 2023, 11:05 PM IST
  • மஹிந்திரா கார்களுக்கு செம ஆஃபர்
  • 1.25 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு
  • இந்த ஆஃபர் மீண்டும் கிடைக்காது

Trending Photos

கண்ணா கார் வாங்க ஆசையா? 1.25 லட்சம் தள்ளுபடியில் விற்பனையாகும் மகேந்திரா கார் title=

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, மக்கள் மத்தியில் பெரும் நம்பகத்தன்மைப் பெற்றுள்ளது. இவர்களின் ஒவ்வொரு தயாரிப்பும் சந்தையில் வந்த வேகத்தில் விற்பனையாகிவிடும். அப்படியான மஹிந்திரா இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரையில் XUV400, Marazzo, XUV300, Bolero மற்றும் Bolero Neo உள்ளிட்ட வாகனங்களுக்கு தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது. இது தான் செம்ம ஆஃபர், இப்ப மிஸ் பண்ணா இதே ஆஃபர் திரும்ப எப்ப கிடைக்கும்னு தெரியாது.

மஹிந்திரா XUV 400

XUV400 தான் மஹிந்திராவில் உள்ள ஒரே EV ஆகும். இந்த சலுகை ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் தள்ளுபடி இலவச ஆக்சஸெரீஸ் இல்லாத ஃபிளாட் கேஷ் இந்த மாடலுக்கு கிடைக்கிறது. இப்படி ஒரு சலுகை EC மற்றும் EL ஆகிய இரண்டு வேரியண்ட்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இது 375 கிமீ மற்றும் 456 கிமீ MIDC வரம்பு, 150hp மற்றும் 310Nm டார்க்கை உற்பத்தி செய்யும் முன் அச்சு பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க  Hyundai Exter CNG vs Tata Punch CNG: உங்களுக்கு ஏற்ற கார் எது?

மஹிந்திரா தார்

தார் 4WD பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் ரூ. 20,000 மதிப்புள்ள உண்மையான துணைக்கருவிகள் விற்பனையில் உள்ளது. தார் 4x4 AX(O) மற்றும் LX ஆகிய இரண்டு டிரிம்களில் வருகிறது. இவற்றுள் 152hp மற்றும் 300Nm டார்க் கொண்ட 2.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 130hp மற்றும் 300Nm டார்க் கொண்ட 2.2-லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவற்றுக்குள் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. மேலும் இரண்டு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது. ஆனால், தார் RWD மாடலுக்கு எந்த தள்ளுபடியும் இல்லை.

மஹிந்திரா பொலீரோ

இது 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் மூலம் 76hp மற்றும் 210Nm டார்க்கை வெளிப்படுத்தும். மேலும்  5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பணத் தள்ளுபடிகள் மற்றும் துணைக்கருவிகள் உட்பட ட்ரிமைப் பொறுத்து ரூ.25,000 முதல் ரூ.60,000 வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ

மராஸ்ஸோ 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 123hp மற்றும் 300Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. மராஸ்ஸோவின் அனைத்து வகைகளும் ரூ. 73,000 தள்ளுபடியைப் பெறுகின்றன. இதில் ரூ.58,000/- ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூ.15,000/- மதிப்புள்ள உண்மையான துணைக்கருவிகளும் அடங்கும்.

மஹிந்திரா XUV 300

மஹிந்திரா நிறுவனம் XUV 300 பெட்ரோல் மாடலுக்கு ரூ.45,000-71,000 வரை தள்ளுபடியும், XUV 300 டீசல் மாடலுக்கு ரூ.45,000-56,000/- வரை தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. XUV300 இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜினைப் பெறுகிறது. 110hp மற்றும் 131hp, 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் 117hp, 1.5-லிட்டர் டீசல் எஞ்சின், MT அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா பொலீரோ நியோ

பொலீரோ நியோ கார் ஆனது லேடர்-ப்ரேம், ரியர் வீல் டிரைவ், சப்-காம்பாக்ட் SUV 7-சீட்டர் உள்ளமைவுடன் வருகிறது. இது 100hp மற்றும் 260Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு பொலீரோவின் டிரிமைப் பொறுத்து ரூ.22,000-50,000/- வரை ரொக்கத் தள்ளுபடிகள் அல்லது உண்மையான பாகங்களை பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Whatsapp அட்டகாசமான புதிய அம்சம்: இனி இங்கும் ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News