ரியல்மீ தள்ளுபடிகள்: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மியின் Realme GT Neo 3T ஸ்மார்ட்போன் மிட் ரெஞ் பிரிவின் ஸ்மார்ட்போனாகும். இதில் பல ஒப்பிடமுடியாத அம்சங்கள் கிடைக்கின்றன. இதில் மிக நேர்த்தியான கேமரா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் அதன் ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் அதில் கிடைக்கும் விவரக்குறிப்புகளைப் பார்த்தவுடன் உடனடியாக அதை முன்பதிவு செய்கிறார்கள்.
இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை சுமார் ரூ. 39,000 ஆகும். இருப்பினும், வாடிக்கையாளர்கள் இன்று முதல் குறைந்த விலையில் இதை வாங்க முடியும். ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சலுககள் வழங்கப்படுகின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல, பல சலுகைகள் டீலில் இடம் பெற்றுள்ளன. இந்த சலுகைகள் காரணமாக ஸ்மார்ட் போனின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
இதில் கிடைக்கும் சலுகை என்ன?
Realme GT Neo 3T ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 39,000 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இதில் 26% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிக்கு பிறகு அதன் விலை ரூ. 28,499 ஆக குறையும்.
மேலும் படிக்க | இன்று வெளியாகிறது OnePlus 11, ஸ்ட்ரீமிங் ஈவன்ட்டை லைவில் பார்ப்பது எப்படி?
இந்த தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும், இதற்காக வாடிக்கையாளர்களுக்கு தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு பெரிய சேமிப்பாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய நன்மை கிடைக்கும்.
இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு இன்னும் இதில் அதிக சலுகைகளை பெறவும் வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இதை எப்படி பெறுவது என்பதை இங்கே காணலாம்.
எக்ஸ்சேஞ் டிஸ்கவுண்ட்
இந்த ஸ்மார்ட்போனில் பிளிப்கார்ட் மூலம் ரூ. 20,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி, அதாவது பரிமாற்ற சலுகை வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பெற முடிந்தால், சுமார் ரூ. 8499-க்கு இந்த போனை வாங்கலாம். மேலும் வேறு சில வங்கிச் சலுகைகளைப் பெற முடிந்தால், வாடிக்கையாளர்கள் சுமார் ரூ. 8000-க்கு வாங்கலாம். ஆகையால் இது வாடிக்கையாளர்களுக்கு இது மிக நல்ல டீலாக இருக்கும்.
மேலும் படிக்க | ஒரு மாதத்திற்கு 60 GB டேட்டா! புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் அசத்தும் ஏர்டெல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ