வாட்ஸ்அப் பயன்: பல பயன்பாடுகளில் வீடியோ அழைப்பு நீண்ட காலமாக உள்ளது. ஆயினும்கூட, COVID19 காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வரும் வரை உலகம் அதன் பயன்பாட்டில் ஒரு பெரிய எழுச்சியைக் கண்டதில்லை. தற்போது மக்கள் தங்கள் நண்பர்கள், குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள பல வீடியோ அழைப்பு தளங்களுக்கு திரும்பியுள்ளனர்.
வீடியோ அழைப்பு பயன்பாடு அதிகரித்து உள்ள இந்த நேரத்தில், சில தளங்களை அவற்றின் பயன்பாடுகளில் மாற்றங்களைச் செய்யவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவும் கட்டாயப்படுத்தியுள்ளது.
தற்போது உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப், அதன் வீடியோ அழைப்பு அம்சத்திலும் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த தளம் இப்போது எட்டு பேர் வரை ஒருவருக்கொருவர் இணைக்க அனுமதிக்கிறது. முன்னதாக, ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் நான்கு பேர் வரை மட்டுமே இணைந்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் எட்டு நபர்களுடன் வீடியோ அழைப்பை எவ்வாறு செய்யலாம் என்பது இங்கே:
- இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது. மேலும் WhatsApp பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த சலுகை இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது இது ஆண்ட்ராய்டில் பதிப்பு 2.20.133 மற்றும் iOS இல் பதிப்பு 2.20.50.25 இல் கிடைக்கிறது.
- வீடியோ அழைப்புகளில் பங்கேற்பாளர்கள் அனைவரும் வாட்ஸ்அப்பின் மேலே குறிப்பிட்ட பதிப்புகளை இயக்க வேண்டும்.
- வீடியோ அழைப்பை இரண்டு வழிகளில் தொடங்கலாம்.
- சிலருக்கு அழைப்பு விடுத்து வீடியோ காலில் சேர்க்கலாம்.
- அல்லது, நீங்கள் ஒரு குழுவுக்குச் சென்று வீடியோ அழைப்பைத் தொடங்கலாம். அழைப்புக்கு முன்னர், குழுவில் உள்ள உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் கேட்கும். 8 பங்கேற்பாளர்களைக் காட்டிலும் குறைவாகவோ அல்லது சரிசமமாகவோ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்று வாட்ஸ்அப் இன்னும் அறிவிக்கவில்லை, இருப்பினும், விரைவில் இந்த அம்சத்தை எதிர்பார்க்கலாம்.