உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில் மீண்டும் அணு ஆயுத சோதனை!

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : May 5, 2019, 05:22 PM IST
உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில் மீண்டும் அணு ஆயுத சோதனை! title=

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது.

பின்னர் கடந்த 2018 -ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து ஒப்பந்தம் மேற்கொண்டனர். 

இந்த ஒப்பந்தத்தின் படி கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா சம்மதித்தது. பின்னர் கடந்த பிப்ரவரியில் மீண்டும் இரு நாட்டு தலைவர்களும் வியட்நாமின் ஹனோயில் சந்தித்து பேசினர்.

இந்நிலையில் தற்போது வடகொரியா கிழக்கு கடற்கரையோரம் ஹோடா தீபகற்ப பகுதியில் 70 முதல் 200 கி.மீ. தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் பல ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த ஏவுகணைகள் சோதனை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, தென்கொரியா வெளியுறவு அமைச்சர் கியூங் வா விடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். 

வடகொரியாவின் ஏவுகணை சோதனை அமெரிக்க அதிபர் டிரம்ப்பி்ன் அமைதி முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது.

Trending News