போன் பழசானாலும் புதுசா அப்டேட் மாசாமாசம் வந்துகிட்டே இருக்கும்! ஒன்பிளஸ் மாயம்!!

OnePlus Update : ஒன்பிளஸ் சாதனங்களுக்கான மாதாந்திர மென்பொருள் புதுப்பிப்புகளின் வெளியீடு ஆகஸ்ட் 2 ஆம் தேதி படிப்படியாக தொடங்கியது... அதில் வரும் சாதனங்கள் எவை? தெரிந்துக் கொள்வோம்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 8, 2024, 04:35 PM IST
  • ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் & டேப்லெட்டுகள்
  • ஒன்பிளஸ் 12, Pad 2 மற்றும் Nord 4 புதுப்பிப்புகளைப் பெறும்
  • இந்தியாவிலும் பிற பிராந்தியங்களுக்குமான மென்பொருள் புதுப்பிப்பு
போன் பழசானாலும் புதுசா அப்டேட் மாசாமாசம் வந்துகிட்டே இருக்கும்! ஒன்பிளஸ் மாயம்!! title=

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மென்பொருட்கள் மாதாந்திர அளவில் புதுப்பிக்கும் முறை ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்த புதுப்பிப்பு இந்தியா உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் படிப்படியாக தொடங்கியுள்ளது. ஒன்பிளஸ் 12 புதிதாக அறிவிக்கப்பட்ட புதுப்பிப்புகளைப் பெறும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்

ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான புதிய மென்பொருள் தொடரை இந்தியா மற்றும் பிற நாடுகளில் வெளியிடுவதாக நேற்று (ஆகஸ்ட் 7, 2024 புதன்கிழமை) அறிவித்தது.  இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து, தகுதியான கைபேசிகள் அவ்வப்போது புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு இணைப்புகளுடன் புதிய மாதாந்திர மென்பொருள் புதுப்பிப்புகளைப் பெறும் என்று தெரிகிறது. ஒன்பிளஸ் சுயமாக உருவாக்கிய செயலிகள் மற்றும் புதிய அம்சங்களை சில குறிப்பிட்ட சாதனங்களுக்கு கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது. 

ஒன்பிளஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் பேட் 2, ஒன்பிளஸ் ஓப்பன், ஒன்பிளஸ் 12ஆர் ஆகியவற்றின் புதிய பதிப்புகளுடன், நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் சமயத்தில் இந்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.  

ஒன்பிளஸ் மாதாந்திர மென்பொருள் புதுப்பிப்புகள்

இந்த புதுப்பிப்பு தொடர்பாக சமூக ஊடக இடுகையில் பதிவிட்ட ஒன்பிளஸ், U120P01 மற்றும் U120P02 என இரு பதிப்புகளுக்கு மாதாந்திர அப்டேட் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக புதிய மென்பொருள் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதுப்பிப்புகள் வழக்கமான ஓவர்-தி-ஏர் (OTA) செயல்முறையைத் தவிர்த்து, புதிய அம்சங்களையும் மேம்பாடுகளையும் உடனடியாக கைபேசிகளுக்குக் கொண்டு வரும்.

மேலும் படிக்க | சந்தேகங்களை தீர்க்க உதவும் வாட்ஸ்அப் நீல வட்டம்! மெட்டா ஏஐ அறிவு ஒளிவட்டம்!

ஒன்பிளஸ் சாதனங்களுக்கான மாதாந்திர மென்பொருள் புதுப்பிப்புகளின் வெளியீடு ஆகஸ்ட் 2 ஆம் தேதி படிப்படியாக தொடங்கியதாக தெரிகிறது. இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் என ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் உள்ள பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். UAE, குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் வாடிக்கையாளர்களும் புதுப்பிப்பைப் பெறுவார்கள்.

OnePlus Open இன் அபெக்ஸ் பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த புதுப்பிப்பு சமீபத்திய OxygenOS 14.00 மற்றும் அதற்கு மேல் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் OxygenOS 13.1.0 மற்றும் 13.00 போன்ற முந்தைய பதிப்புகளுடன் இணக்கமாக இருக்கும்.

OxygenOS 14.0.0 மற்றும் அதற்கு அடுத்தவை
OnePlus 12 சீரிஸ், ஒன்பிளஸ் ஓபன், ஒன்பிளஸ் 11 சீரிஸ், ஒன்பிளஸ் 10 சீரிஸ், ஒன்பிளஸ் 9 சீரிஸ், ஒன்பிளஸ் 8டி, ஒன்பிளஸ் நார்ட் 4 5 ஜி, ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி,  ஒன்பிளஸ் நார்ட் 2T 5G, ஒன்பிளஸ் நார்ட் CE 4 5G, ஒன்பிளஸ் நார்ட் CE 3 5G, ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5G, ஒன்பிளஸ் நார்ட் CE 2 லைட் 5G.

இவற்றைத் தவிர, ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பேட் கோ ,ஆக்சிஜன்ஓஎஸ் 13.1.0 ,ஒன்பிளஸ் 8, OnePlus 8 ப்ரோ, ஆக்சிஜன்ஓஎஸ் 13.0.0, ஒன்பிளஸ் நார்ட் 2 5G, ஒன்பிளஸ் நார்ட் CE 2 5G, ஒன்பிளஸ் நார்ட் CE 5G ஆகியவையும் சாஃப்ட்வேர் புதுப்பிப்புகளை மாதந்தோறும் பெறும்.

மேலும் படிக்க | BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News