Amazon-ல் வெளியானது Oppo RealMe 1 போன்! முந்துங்கள் மக்களே!

ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் 3ஜிபி + 32ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி கொண்ட போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 

Last Updated : May 25, 2018, 12:07 PM IST
Amazon-ல் வெளியானது Oppo RealMe 1 போன்! முந்துங்கள் மக்களே! title=

ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் 3ஜிபி + 32ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி கொண்ட போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 

3ஜிபி + 32ஜிபி - ரூ. 8,990
6ஜிபி + 128ஜிபி - ரூ. 13,999 

என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் வரிசையில் ரியல்மீ 1 வெளியிடப்பட்டுள்ளது. ரியல்மீ 1-னின்  பின்பக்க பேனல் பிளஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்டல் சாதனத்தின் மீது கிளாஸ் பணி முழுமையை விரும்புவோருக்காக, டைமண்டு பிளாக் வடிவமைப்பில் சஃப்பாரின் பெற்றுள்ளது.

ரியல்மீ 1 இல் உள்ள 6 இன்ச் எஃப்ஹெச்டி+ ஐபிஎஸ் திரை, அறையின் உட்புறத்தில் வெளிச்சமாக உள்ளது. இதில் ஸ்கிரீன் மற்றும் பாடி இடையிலான விகிதம் ஏறக்குறைய 85% உள்ளதால், அதிவேகமான வீடியோ ப்ளேபேக், பன்முக பணியாற்றல் மற்றும் கேம்மிங் அனுபவம் ஆகியவை சிறப்பாக உள்ளது. 

ரியல்மீ 1 இல் எஃப்/2.2 துளையை பயன்படுத்தி எல்இடி பிளாஷ் உடன் இயங்கக் கூடிய 13எம்பி பின்பக்க கேமரா காணப்படுகிறது. முன்பக்கத்தில் எஃப்/2.2 துளை லென்ஸ் உடன் கூடிய 8 எம்பி கேமரா உள்ளது. இதில் உள்ள ஏஐ ஷாட் மூலம் 296 முகப் புள்ளிகளை கணக்கில் கொண்டு புகைப்படங்களை பதிவு செய்யும் திறன் கொண்டதாக செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்டு இரட்டை 4ஜி சிம் கார்டு ஆதரவுடன் மெம்ரி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முன்பக்க மற்றும் பின்பக்க படங்களிலும் வீடியோ பதிவு செய்யவும், ஏஆர் ஸ்டிக்கர்கள் அளிக்கப்பட்டுள்ளது. 13எம்பி பின்பக்க கேமராவில் உள்ள ஏஐ காட்சி அங்கீகாரம் மூலம் வெவ்வேறு காட்சிகள் மற்றும் பொருட்களை, திறமையாகவும் கச்சிதமாகவும் கண்டறிய முடிகிறது. ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் உலகிலேயே முதல் 12என்எம் ஏஐ சிபியூ ஆன மீடியாடெக் ஹீலியோ பி60 சிபியூ, 12என்எம் பின்எஃப்இடி தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன்,  6 அங்குல முழு எச்டி+ திரையை கொண்டு  மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்பட்டு 3ஜிபி ரேம், 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என மொத்தமாக மூன்று விதமான ரேம் மாறுபாடுகளில் கிடைக்கின்றது.

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி கலர் OS 5.0 இயங்குதளத்தை பெற்ற இந்த போனில் 3410mAh பேட்டரி ஆனது செயற்கை நுண்ணிறிவு சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது.  

இந்தியாவில் பிரத்தியேகமாக அமேசான் இந்தியா தளத்தில் இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்த ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 

 

 

 

 

Trending News