Jio Laptop Under 15K: எங்கும் ஜியோ எதிலும் ஜியோ என்ற மந்திரத்தை கையில் எடுத்து ஒவ்வொரு துறையாக களமிறங்கிக் கொண்டிருக்கிறது ஜியோ. ஸ்மார்ட்போன் நெட்வொர்கில் களமிறங்கிய ஜியோ, டேட்டா, சிம்கார்டு, மொபைல் என தன்னுடைய சந்தையை அசுரவேகத்தில் விரிவாக்கியது. ஜியோ கொடுத்த சலுகை மற்றும் ஆஃபர்களால் வசீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், அந்த பிராண்டின் வாடிக்கையாளர்களாக மாறியதால் அடுத்தடுத்து என முன்னேறிக் கொண்டே செல்கிறது ஜியோ. இப்போது, அடுத்த டார்க்கெட்டாக லேப்டாப் துறையில் கால்பதிக்க இருக்கிறது. மிகவும் மலிவு விலையில் அசத்தல் அம்சங்களும் லேப்டாப்பை களமிறக்க உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு லேப்டாப்பின் முக்கியத்துவம் மற்றும் தேவையின் காரணமாக மார்க்கெட்டில் லேப்டாப்புக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. இதில் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், விலை. குறைவான விலையில் பேஸிக் தரத்துடன் கூடிய லேப்டாப்பை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதனை புரிந்து கொண்ட ஜியோ, அடுத்ததாக ஜியோ லேப்டாப்-ஐ களமிறக்க இருக்கிறது. அதுவும் 15 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் அந்த லேப்டாப் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | 5ஜி பயன்படுத்த புதிய சிம் வாங்க வேண்டுமா?
JioBook
ஜியோவின் இந்த புதிய லேப்டாப் ஜியோ புக் என அழைக்கப்படும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப ஜாம்பவான்களான குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து இந்த லேப்டாப்பை உருவாக்கி, மார்க்கெட்டில்ல களமிறக்க இருக்கிறது. இதன் மூலம் ஹூட்டின் கீழ், ஜியோ புக் மடிக்கணினியில் குவால்காமிலிருந்து ஒரு சிப் இருக்கும். ரிலையன்ஸ் ஜியோபுக் செயலிகளுக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் வழங்குகிறது.
ஜியோபுக் அறிமுகம்
இந்த மாத இறுதியில் புதிய ஜியோ லேப்டாப் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதாவது, கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு புதிய லேப்டாப் கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியாக ஜியோ நிறுவனத்தின் ஜியோ புக் லேப்டாப் கிடைக்கும். அதாவது, வணிக மார்க்கெட்டில் களமிறங்கும் ஜியோ லேப்டாப் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.
ஜியோ காக்கும் மவுனம்
ஆனால், இந்த தகவலை ஜியோ நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இப்போதைக்கு ஜியோவின் இலக்கு மாணவர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் என்பதால், அதற்கான லேப்டாப்கள் டிசைன் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்து வகையான லேப்டாப்களும் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் லேப்டாப் மார்க்கெட்டில் பெரிய பூகம்ப விற்பனையை டார்கெட் செய்திருக்கிறது ஜியோ நிறுவனம்.
மேலும் படிக்க | 5G நெட்வொர்க் வேண்டுமா? ஜியோ-ஏர்டெல்-VI வாடிக்கையாளர்கள் இதை செய்யுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ