பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான சாம்சங் நிறுவனம் தனது புதுவரவான Galaxy A9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!
6GB RAM + 128GB மற்றும் 8GB RAM + 128GB என இரண்டு வகைப்பாட்டில் சந்தைகளில் கிடைக்கும் இந்த மொபைல்கள் முறையே Rs 36,990 மற்றும் Rs 39,990 என பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த Samsung Galaxy A9 ஸ்மார்போனிற்கான முன்பதிவு இன்று முதல் இந்தியாவில் துவங்குகிறது. எனினும் வரும் நவம்பர் 28-ஆம் நாள் பயனாலர்களுக்கு கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போனினை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் Amazon India, Airtel online store, Paytm Mall, Flipkart போன்ற இணைய அங்காடிகளில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அதே வேலையில் இந்த போன் ஆனது சாம்சங் நிறுவனத்தின் நேரடி அங்காடிகளிலும் கிடைக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிமுக சலுகையாக HDFC வங்கி அட்டையினை பயன்படுத்தி போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Rs.3000 பண திரும்பெறும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy A9 பற்றி சில முக்கிய தகவல்கள்...
- நான்கு பின் கேமிராக்கள் (8MP ultra-wide Sensor, 24MP main sensor, 5MP depth sensor, 10MP telephoto sensor)
- 24MP முன்கேமிரா.
- 3800mAh பேட்டரி.
- 6.3" HD தொடுதிரை
- Qualcomm Snapdragon 660 Processor, என பல அம்சங்களை கொண்டுள்ளது.
இத்துனை அம்சங்கள் கொண்ட இந்த போன் ஆனது தற்போது காவியர் கருமை, லெமணட் நீலம் மற்றும் பிங் என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது.