Vivo Y16 4G: வெளியானது விவோவின் புதிய மாடல்; வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்

Vivo Y16 4G ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரியுன் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2022, 09:28 AM IST
  • விவோவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
  • விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்
Vivo Y16 4G: வெளியானது விவோவின் புதிய மாடல்; வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள் title=

Vivo Y16 4G Launch: Vivo Y16 4G ஸ்மாரட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிபாபக அதன் வடிவமைப்பும் சிறப்பாக உள்ளது. நீங்கள் இதை வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், அந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்

Vivo Y16 4G விவரம்

Vivo Y16 4G ஸ்மார்ட்போனில் 6.51 இன்ச் HD + டிஸ்ப்ளே உள்ளது. இது Android 12 அடிப்படையிலான Funtouch OS 12-ல் வேலை செய்கிறது. MediaTek Helio P35 செயலி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட ரேம் 2.0 ஆதரவு இதில் கிடைக்கிறது. கூடுதலாக 1 ஜிபி ரேமை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் செய்து கொள்ள முடியும். 

மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் பணத்தை சுருட்டும் நிறுவனம்; அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்

Vivo Y16 4G கேமரா

Vivo Y16 4G இல் 13MP முதன்மை கேமரா உள்ளது. அதனுடன் 2MP இரண்டாம் நிலை கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக, வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனில் 5MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Vivo Y16 4G விலை

Vivo Y16 4G-ன் விலை வெளியிடப்படவில்லை. இதனால், விலை பற்றி வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். ஸ்டெல்லர் பிளாக் மற்றும் ட்ரிஸ்லிங் கோல்ட் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் போனை அறிமுகப்படுத்தியிருக்கும் விவோ, இந்தியா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளில் விரைவில் விற்பனை வர இருக்கிறது.

மேலும் படிக்க | அமேசான் - பிளிப்கார்ட்டை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News