தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் வருகின்ற 24-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அவர் தனது முகப்புத்தகத்தில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
'நீட்' தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடல தகனம் செய்யப்பட்டது.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கோரி அரியலூர் மாவட்ட குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
#WATCH: Villagers in Ariyalur district's Kulumur protest over death of #Anitha who appealed against NEET in SC, demand justice #TamilNadu pic.twitter.com/m658uINM29
வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்ததைக் கண்டித்து, சென்னை மலேசிய தூதரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக கழகம் கூறியுள்ளது.
இதைக்குறித்து மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கூறியதாவது:-
மதிமுக கழகப் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக சென்னையில் உள்ள மலேசியா தூதரகத்தில் கடவுச்சீட்டு வாங்கி, அனுமதிபெற்று நேற்று இரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டு இறைச்சி தடையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் நாளை( 31-ம் தேதி) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதைக்குறித்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் வகையில், மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தி.மு.கழகம் தனது எதிர்ப்பினைத் தொடக்கத்திலேயே பதிவு செய்தது.
அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பாலியல் தொழிலாளியை விட மோசமாக நடந்து கொள்கிறார் என உ.பி. மாநில பா.ஜ துணைத் தலைவர் தயா சங்கர் சிங், கூறினார். இதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். ராஜ்யசபாவில் நிதியமைச்சர் ஜெட்லி மன்னிப்பு கோரியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.