தமிழக மீனவர்களுக்கு எதிராக கடற்தொழில் சட்டதிருத்த மசோதா இலங்கை பார்லிமென்டில் இலங்கை மீனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.
கார்டிப்பில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை எடுத்து சாதனை படைத்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். இதனால் இரு அணி வீரர்களும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது. ஷிகார் தவான் சிறப்பான விளையாடி சதம் விளாசினார்.
சம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய அணி முதலில் 'பேட்டிங்' துவக்கியள்ளது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஜூன் 1-ம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடர் தொடங்கியது. இன்று நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மோதுகின்றது.
இலங்கை அணியில் முழங்கால் காயம் காரணமாக சமரா கபுகேதரா விலகினார். காயத்தில் இருந்து மீண்ட ரெகுலர் கேப்டன் மாத்யூஸ் அணிக்கு திரும்பினார். உபுல் தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் திசாரா பெரேரா வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீடுகளை வழங்கினார்.
அப்போது, 'இலங்கை அதிபர் மைத்திரி பாலா சிறிசேனாவைச் சந்தித்து, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இதனிடையே, 'ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது' என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்துசெய்தார்.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இலங்கையில் பெய்ந்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 169-ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் பெய்ந்து வரும் கனமழைக்கு 169 பேர் பலியாகியுள்ளனர். 109 பேர் காணாமல் போய் உள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். வீடுகளை இழந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணத்தால் 92 பேர் உயிரிழந்த்துள்ளனர். இலங்கையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழை பெய்துள்ளது.
கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 110 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை பயணம் குறித்து டிவிட்டரில் தமிழில் டிவிட் செய்துள்ளார்.
இலங்கையில், வெசாக் தினத்தையொட்டி நடக்கும் கொண்டாட்டங்களில், தலைமை விருந்தினராக பங்கேற்க, பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு செல்கிறார்.
இலங்கையில் மோடி, டிகோயா நகரில், அமைக்கப்பட்டுள்ள, 150 படுக்கைகள் உடைய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இந்த மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை, நம் அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது இலங்கை பயணம் குறித்து டிவிட்டரில் தமிழில் பதிவி:-
இலங்கை சிறையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 38 மீனவர்களை விடுதலை செய்ய, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைதுசெய்வதும், தாக்குதல் நடத்துவதும், படகுகளை பிடித்து வைத்துக்கொள்ளவது என தொடர்ந்து வருகிறது. எனவே இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இலங்கை விழாவிற்கு செல்ல முடியாத சூழலில், அங்குள்ள ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் நிகழ்ச்சி வரும் 10-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவதாக கூறப்பட்டது.
ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள், நாகை மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மொத்தம் 85 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாத காலமாக அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில், இலங்கை சிறைகளில் இருந்து 85 மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன் வந்தது.
இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு இன்று சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கை சிறையிலிருந்து 85 மீனவர் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:-
இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. மீனவர் மீது நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என இலங்கை அரசும், அந்நாட்டு கடற்படையும் கூறியுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கை கடற்படையினால் தமிழ் மீனவர் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சீமான் தலைமையில் இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
தமிழ் மீனவரைச் சுட்டுப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், தொடரும் தமிழக மீனவர் மீதான இனவெறி தாக்குதலைத் தடுக்க இலங்கையின் மீது போர்தொடுத்து கச்சத்தீவை மீட்க இந்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-03-2017 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
கடந்த 6-ம் தேதி இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ (22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ (22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, பிரிட்ஜோ உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.