இலங்கையில் பெய்ந்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 169-ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் பெய்ந்து வரும் கனமழைக்கு 169 பேர் பலியாகியுள்ளனர். 109 பேர் காணாமல் போய் உள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். வீடுகளை இழந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
8 மாவட்டங்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலங்கையின் முப்படையினர் முழுவீச்சில் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்ற MI-17 விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா தரப்பில் இருந்து உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பியுள்ளது.
Indian Navy teams deployed at Kalutara alongside SL Navy in relief operations #FloodSL @SushmaSwaraj @indiannavy pic.twitter.com/VWsv4NtdJ8
— India in Sri Lanka (@IndiainSL) May 29, 2017
Indian diving and medical teams deployed at Kalutara, Ratmalana n Galle with SL Navy relief opns. #FloodSL @SushmaSwaraj @indiannavy pic.twitter.com/Y8feP2KTz7
— India in Sri Lanka (@IndiainSL) May 29, 2017
இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இலங்கை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.