இலங்கை சிறையிலிருந்து 85 மீனவர் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:-
இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. மீனவர் மீது நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என இலங்கை அரசும், அந்நாட்டு கடற்படையும் கூறியுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன.
All 85 Indian fishermen currently in Sri Lankan custody will be released. We are awaiting further orders in this regard: Gopal Baglay, MEA pic.twitter.com/hDS9H0OzoV
— ANI (@ANI_news) March 9, 2017
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசின் முழு விசாரணை முடியும் வரை காத்திருப்போம். இந்திய, இலங்கை அரசுகள் இடையேயான பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும்.
Sri Lankan navy & govt maintained there has been no firing from SL navy side, agreed to investigate: MEA on killing of Indian fisherman pic.twitter.com/1R2MEjpjOQ
— ANI (@ANI_news) March 9, 2017
ஹெச்1-பி விசா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.
We will continue to remain engaged with US authorities in this regard: MEA spokesperson Gopal Baglay on H1B visa issue pic.twitter.com/AqwW4KdwiK
— ANI (@ANI_news) March 9, 2017