காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பவதாக தகவல் வெளியாகியுள்ளது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஏப்ரல் 11-ம் நாள் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்!
காவிரி மேளான்மை விவகாரம் தொடர்பாக அதிமுக MP முத்துக்கருப்பன் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யவுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்!
சென்னை அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஐயன் அவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!
வரும் பிப்.,21 ஆம் நாள் தனது சுற்றுப்பயணத்தினை துவங்கவுள்ள நடிகர் கமலஹாசன் அவர்கள், அன்றைய தினமே தனது கட்சி கொடியினை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல துறை நிபுணர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.
அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நடித்துள்ள விவேகம் படம் குறித்து கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தல அஜித் நடித்த விவேகம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் திலீப் குமார் நேற்று மருத்துவமனையில் இருந்து நல்லபடியாக வீடு திரும்பினார். இது குறித்து நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் திலீப் குமார், கடந்த வாரம் மோசமான நிலைமையில் மும்பை லால்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரது சிறுநீரகங்கள் இயல்பான முறையில் இயங்குவதாக தெரிவித்த மருத்துவர்கள் நேற்று (ஆகஸ்ட் 9) 94 வயது இளைஞரான திலீப் குமார் நல்லபடியாக வீடு திரும்பினர்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதவது:-
கடந்த ஒரு மாதமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
அப்போது அந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ஒருமுறை நடிகர் பரணியை பார்த்து 'சேரி பிகேவியர்' என கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்த சமூகத்தை இழிவுபடுத்தும்படி பேசிய காயத்ரி, தொகுத்து வழங்கிய கமல், அந்த வார்த்தையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது 100 கோடி ருபாய் நஷ்டஈடு தரவேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜுலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என அச்சம் கொந்து உள்ளனர். இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் அவர் அளித்த பேட்டி:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.