கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பழைய ரூபாய் நோட்டுகள் தன்னுடையது எனவும், டிசம்பர் 31க்குள் செலுத்துவதில் சிக்கல் இருந்தது என்பதை நிருபித்தால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கடுமையாக கூறினர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் அல்லது பரேல் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்.
நீதிபதி கர்ணன் தமிழகத்தைச் சேர்ந்த கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர், தன் சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி, சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இறுதியாக, நீதிபதி கர்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இறைச்சி மாடுகள் விற்கவும் வாங்கவும் சில கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை கேரளா, மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மாட்டிறைச்சிக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசன் இந்த உத்தரவை எதிர்த்து, ஐதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைப்பெற்றது.
இந்த தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் சிலர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை ஐகோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டால் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவு பெறுகிறது.
‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனைபெற்று தலைமறைவாக உள்ளவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா ஐ கோர்ட் நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர், தன் சக் நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி, சுப்ரீம் கோர்ட்டின் தன்னார்வ விசாரணையில் நீதிபதி கர்ணன் மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டன.
வருமானவரி தாக்கல் செய்வதற்கும், பான் கார்டிற்கு விண்ணப்பிப்பதற்கும் ஆதார் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பான் எண் பெற ஆதார் அவசியமில்லை என தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி தாக்கல் செய்யவும், பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கவும் ஜூலை 1 வரை ஆதார் அவசியம் இல்லை.
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வானது, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளை ஜுன் மாதம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலை நீட் தேர்வில் பல்வேறு குளறபடி நடந்துள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனை அவரச வழக்காக எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுக்கப்பட்டது.
முத்தலாக் நடைமுறையை செல்லாது அது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் அறிவிக்குமானால், இஸ்லாமியரின் திருமணம் மற்றும் விவகாரத்தை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர் பின்பற்றும் முத்தலாக்க பிரச்னை குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மதங்களை சேர்ந்த 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பிரச்னை குறித்து ஏற்கனவே மூன்று நாட்கள் விசாரணை நடந்துள்ளது. இன்று 4-வது நாளாக விசாரணை நடந்தது.
முத்தலாக் என்ற விவாகரத்து முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினருக்கு வாய்ப்பு கொடுக்கும் படி 3 நாட்கள் வாதங்கள் நடந்து வருகிறது.
முத்தலாக் வழக்கில் பலதார மணம் குறித்து விசாரிக்கப்படாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று முதல் விசாரணை நடைபெற்றது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் பல்வேறு ஐகோர்ட் நீதிபதிகள் மட்டுமல்லாமல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மீதும் தமிழகத்தைச் சேர்ந்த கொல்கொத்தா ஐ கோர்டில் பணியாற்றும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். இதையடுத்து, அவர் மீது சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.எஸ்.கேஹர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து நீதிபதி கர்ணனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
கோர்ட் அவமதிப்பு மற்றும் வங்கிக் கடன் மோசடி வழக்கில், தொழில் அதிபர் விஜய் மல்லையா ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து மோசடி வழக்கில் ஆஜராகுமாறு, விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகத் தவறியதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாலு பிரசாத் மீதான மாட்டு தீவன ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
பீகார் மாநிலத்தில் 1990-97-ல் லாலுபிரசாத் யாதவ் முதல்-மந்திரியாக இருந்த போது மாட்டுத்தீவனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாக லாலுபிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்கிறது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது
முல்லைபெரியாறு அணை பகுதியில் அம்மாநில அரசின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால்முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்கிறது.
மேலும் அணை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரளாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் வழக்கு தொடரப்பட்ட நீதிபதி கர்ணனுக்கு தற்போது மனநிலை குறித்த மருத்துவ பரிசோதனை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக கொல்கத்தா மருத்துவமனையில் வருகிற மே 5-ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
முன்னதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட கொல்கத்தா நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பதவி வகிக்கும் தன் மீது வழக்கு தொடர யாருக்கும் உரிமையில்லை என ஆஜராக மறுத்தார்.
தமிழகத்தில் ஒரு விவசாயிகூட வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை தாமதப்படுத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் குறித்து மக்கள் புகார் அளித்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டிக்கக் கூடிய அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்களை நியமிக்க நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரையும் சேர்த்து குழு அமைக்கப்பட வேண்டும் என்பது தான் லோக்பால் சட்ட அமைப்பு விதி.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபர்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் ஐகோர்ட்டும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சுமார் ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது இது தொடர்பான வழக்கை பெங்களூரு தனிக்கோர்ட்டு விசாரணை செய்தது.
விசாரணை செய்த பெங்களூரு கோர்ட் இவர்கள் 4 பேரும் குற்றவாளிகள் என கண்டு, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை இன்று முதல் மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசே மதுக்கடைகள் நடத்துவதால் கால அவகாசம் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து 100 மீ சுற்றளவுக்குள் மதுக்கடை அமைக்க அரசு அனுமதி கோரியிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.