காலா' படத்தலைப்பின் பின்னணி என்ன என்று அப்பாட்டின் இயக்குனர் பா.ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்.
கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் பா. ரஞ்சித்துடன் இணைகிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். மே 28-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.
கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் பா. ரஞ்சித்துடன் இணைகிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷின் Wunderbar பிலிம்ஸ்க்காக நடித்து கொடுக்கிறார் ரஜினி.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டிவிட்டார் பக்கத்தில் அறிவித்தார்.
ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவு சரியாகாக தான் இருக்கும் என்று நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார்.
கடந்த 15-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினி, எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது என்றும் 23 ஆண்டு மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன் என்றும் தெரிவித்தார். மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில வாழ்ந்து வரும் தான் ஒரு "பச்சை தமிழன்" என்று அறிவித்துக் கொண்டார்.
பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1342_வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பாஜக-வுக்கு நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை ஏற்று கொள்வோம் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னையை மோடி அரசு கட்டுப்படுத்தும்.
அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை பாஜக ஏற்று கொள்வோம். மேலும் ரஜினிகாந்துக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தாரவி பகுதியை மையாக கொண்ட கதை எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் ரஜினக்கு மிரடட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்தக் கடிதத்தில்:-
நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு கதை கிடைத்தால், அவரை வைத்து படம் இயக்குவேன் என்று பாகுபலி இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
‘பாகுபலி-2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் படத்தைப் பாராட்டி ரஜினி டுவீட் செய்து இருந்தார். பதிலுக்கு ராஜமவுலி, ரஜினி வாழ்த்தியதை, கடவுளே வந்து வாழ்த்தியது போல் உணர்வதாக கூறி, நன்றியும் தெரிவித்து டுவீட் செய்திருந்தார்.
இந்நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு ராஜமெளலி அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது:-
ரஜினி ரசிகர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் 31-ம் தேதி நடைபெற உள்ளது.
ரஜினி ரசிகர் மன்றத்தில் மாநில பொறுப்பாளராக இருக்கும் சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலேசனை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் மற்றும் செயலாளர் சென்னை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா டீஸரை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சிம்புவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளதாக சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் குஷியாக பதிவு செய்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் வருகிறார்.
இந்நிலையில் அஸ்வின் தாத்தா டீஸர் ரிலீஸாகியுள்ள நிலையில் ட்ஸீரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சிம்புவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து சிம்பு டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துவரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜி குழுமம் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு முன் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம் பாட்ஷா. அட நம்ம சூப்பர் ஸ்டார் நடிப்பில் இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் கடந்த வாரம் ஆனது.
இப்படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் கூட்டம். புதிய ஒளித்தரம், ஒலித் துல்லியம், புது பின்னணி இசை என அசத்தியது படம். காட்சிக்குக் காட்சி அதிர்ந்தது அரங்கம். தலைவரின் பாட்ஷாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
முதல் நாளில் இருந்து இப்போதுவரை அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ 1.75 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தனது ஆதரவை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் வார இதழ் ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசியர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது விழாவில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‛நம் கலாசாரம் காப்பாது நம் கடமை' என்றார்.
பிறகு வைரமுத்து கூறியதாவது: 'யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டைப் பற்றி கருத்து கூறிவிடலாம், ஆனால் 'முரட்டுக்காளை' அதைப் பற்றி கருத்து கூறியதுதான் சிறப்பு' என நெகிழ்ந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டு விட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சமிபத்தில் ரஜினி நடித்த கபாலி படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார்.
பா.ரஞ்சித் அடுத்து வேறு சில முன்னணி ஹீரோக்களின் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் இருந்து இதற்க்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. சுமார் 300 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியின்றி வெளிநாட்டில் ஒய்வு எடுக்கும் போது, அவர் இல்லாத காட்சிகளை காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் ஷங்கர்.
ரஜினியின் கபாலி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மிகப் பிரமாண்டமான விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
பா. ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரித்த கபாலி படம், ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான்காவாது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தொடர்கிறது. இன்றைக்கு ஒரு படம் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவை பிரமிக்க வைத்துள்ளது.
ரஜினிகாந்த் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் 1973-ல் பெங்களூர் போக்குவரத்து கழக பஸ்சில் அவர் பணியாற்றினார். அதன்பிறகு சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அப்போது டைரக்டர் கே. பாலசந்தர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.
பிரபல பட அதிபர் பஞ்சு அருணாசலம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
1941-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர்.
அன்னக்கிளி, ப்ரியா, உல்லாச பறவைகள், கழுகு உள்பட 15 படங்களை தயாரித்தார். அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். 8 படங்களை டைரக்டு செய்துள்ளார். இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர்.
ரஜினியின் ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், நாசர், கலையரசன், ரித்விகா, தினேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.சந்தோஷ் நாராயண் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘நெருப்புடா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற பாடல்களும் சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.