முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் இன்று காலை முதல் முக்கிய
பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அவரது தங்கை பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்து மரியாதை செலுத்தினர்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்த வாலிபர். இந்த தம்பதியருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
கடந்த 2012 வருடம் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த லலிதா(வயது 26) மீது தனிப்பட்ட விரோதம் காரணமாக அவரது உறவினர் ஆசிட் வீசினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு 17 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்று, 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் 5_வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 477 ரன் எடுத்தது.
இந்தியாவின் தரப்பில் ராகுல் 199 ரன்களும், கருண் நாயர் 303 ரன்களின் முச்சத உதவியோடு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், சில நாட்களுக்கு முன்பு, மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். தான் என பேசினார். இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.