Pakistan Latest News Today: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பலூசிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான பலூச் தேசியவாத ஆர்வலர்கள் காணாமல் போயுள்ளனர். இது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவிய நிலையில் தற்போது அதற்கு காரணம் ரசாயன ஆயுதங்களா என்ற அதிர்ச்சிக் கேள்வி சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகிறது...
தொழுகையின் போது மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடி தாக்குதலில் மூத்த போலீஸ் அதிகாரி உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பலுச்சிஸ்தான் மக்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
பாகிஸ்தானின் மாகாணமான பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள காவல்துறை தலமையகத்தின் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 4 போலீஸ் உட்பட 11 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
வெடி குண்டு தாக்குதளில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடப்பதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷன் யாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது.
இவர் இந்திய உளவாளி எனவும், இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி என்றும் பாகிஸ்தான் கூறி குல்பூஷன்யாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா, ’ரா’ உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்நிலையில், குல்பூஷன் யாதவிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தான் போராட்ட குழுவின் தலைவருக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
பலுசிஸ்தான் புக்டிக்கும், அவரது குழுவினருக்கும் குடியுரிமை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலுசிஸ்தான் தலைவர் பிரஹூம்தாக் புக்டி, இந்திய அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.
புக்டி தவிர அவரது நம்பிக்கைக்கு உரியவர்களான ஷெர் முகமது புக்டி மற்றும் அஜிஜூல்லா புக்டி ஆகியோருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் ரயில் விபத்தில் 6 பேர் பலி மற்றும் 150 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முல்டான் பகுதியில் தண்டவளாத்தில் சென்றவர் நபர் மீது சரக்கு ரெயில் மோதி உள்ளது. இதனால் சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த நபரின் சடலத்தை மீட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த பயணிகளின் ரயில் அவாம் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் மீது மோதியது. மோதிய வேகத்தில் அவாம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்ஜின் மற்றும் 4 பெட்டிகள் கவிழ்ந்தது.
பலுஜிஸ்தான் பற்றி பேசுவதற்கு முன்பாக காஷ்மீரில் இந்தியா அரங்கேற்றும் அட்டுழியங்களுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தானின் பிரதான எதிர்கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, பலுஜிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாகிஸ்தானை குற்றம் சாட்டி பேசினார். இது பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, சர்வதேச நாடுகளின் கோரிக்கை படியும், ஐ.நா., தீர்மானத்தின்படியும் காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும். இதற்காக இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரக அதிகாரி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது. இந்த அழைப்பை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
சுதந்திர தின விழா உரையில் பாகிஸ்தானுக்கு கடுமையான தாக்குதலை கொடுத்த பிரதமர் மோடி ”பாகிஸ்தானை பயங்கரவாதம் ஊக்குவிக்கிறது,” என்று கூறிஉள்ளார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.