பலுஜிஸ்தான் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு பிலாவல் பூட்டோ கண்டனம்

Last Updated : Aug 17, 2016, 07:36 PM IST
பலுஜிஸ்தான் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு பிலாவல் பூட்டோ கண்டனம்

பலுஜிஸ்தான் பற்றி பேசுவதற்கு முன்பாக காஷ்மீரில் இந்தியா அரங்கேற்றும் அட்டுழியங்களுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தானின் பிரதான எதிர்கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, பலுஜிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாகிஸ்தானை குற்றம் சாட்டி பேசினார். இது பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி பலுஜிஸ்தான் குறித்து பேசியதற்கு பிலாவல் பூட்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் இறையாண்மையை காக்க எந்த விலையயும் கொடுக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News