Income Tax Saving Tips: நம்மில் பலர் நமது பெற்றோரின் வீட்டில் வாழ்கிறோம். வாடகை வீட்டில் இல்லாததால் HRA க்ளெய்ம் செய்ய முடிவதில்லை. எனினும், பெற்றோர் வீட்டில் இருந்தாலும் HRA க்ளெய்ம் செய்யலாம்.
Cash Deposit in Savings Account: வருமான வரி சட்டங்களில் (Income Tax Act) கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி பண பரிவர்த்தனைகள் (Cash Transactions) சார்ந்த சில விதிமுறைகள் உள்ளன. இதில் பண வைப்புகளும் அடங்கும்.
Last Date to file belated, revised ITR: திருத்தப்பட்ட வரிக் கணக்கு தாக்கல் செய்ய அபராதம் இல்லை. புதிதாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பத்து இலக்க தனித்துவமான எண்ணைக் கொண்ட ஒரு அடையாள அட்டை. ஒரு நபரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால், அவர்கள் உடனடியாக கூடுதல் பான் அட்டையை ஒப்படைக்க வேண்டும்.
கொரோனா நெருக்கடியின் மத்தியில், முதலீடு செய்யும் தங்கள் பணத்திற்கு நல்ல வருவாய் கிடைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தபால் அலுவலகத் திட்டங்கள் அதற்கான சிறந்த தேர்வாக இருக்கிறது
பான் கார்டுகளையும் ஆதார் அட்டையுடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. எனவே நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், எச்சரிக்கையாக இருங்கள். மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி, மார்ச் 31, 2021 ஐ நிர்ணயித்துள்ளது. அதாவது உங்களுக்கு 24 மணிநேரம் மட்டுமே உள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்டகால முதலீட்டு கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு PPF கணக்கு வைத்திருப்பவர் பழைய வருமான வரி அடுக்குகளைத் தேர்ந்தெடுத்திருந்தால், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 80C -ன் கீழ் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய வரி விலக்கு கோருவதற்கு அது உதவியாக இருக்கும்.
வருமானவரி தாக்கல் செய்வதற்கும், பான் கார்டிற்கு விண்ணப்பிப்பதற்கும் ஆதார் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பான் எண் பெற ஆதார் அவசியமில்லை என தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி தாக்கல் செய்யவும், பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கவும் ஜூலை 1 வரை ஆதார் அவசியம் இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.