Income Tax Saving Tips: பெரும்பாலான சம்பள வர்க்கத்தினர் எப்போதும் வருமான வரி விலக்கு குறித்து ஆராய்ச்சியில் உள்ளனர். ஒவ்வொரு பட்ஜெட் நேரத்திலும் தங்களுக்கான வருமான வரி வரம்பிலும், வரி விலக்கிலும் அனுகூலமான செய்தி வருமா என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். வருமான வரியை முடிந்தவரை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்களும் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். வரியை சேமிப்பதற்கான சில சிறப்பு வழிகளைப் பற்றி இதில் காணலாம். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இவற்றில் முதலீடு செய்து நீங்கள் வரியை சேமிக்கலாம்.
வரி சேமிப்பிற்கான முக்கியமான வழிகள்
வீட்டு வாடகை கொடுப்பானவு மூலம் வரி விலக்கு
நம்மில் பலர் நமது பெற்றோரின் வீட்டில் வாழ்கிறோம். வாடகை வீட்டில் இல்லாததால் HRA க்ளெய்ம் செய்ய முடிவதில்லை. எனினும், பெற்றோர் வீட்டில் இருந்தாலும் HRA க்ளெய்ம் செய்யலாம். பெற்றோருக்கு வாடகை கொடுத்து அதன் மூலம் இதை செய்ய முடியும் என்பது பலருக்கு தெரியாமல் உள்ளது. வருமான வரி விதியின் பிரிவு 10(13A) -இன் படி உங்கள் பெற்றோரை நீங்கள் வசிக்கும் வீட்டின் சொந்தக்காரர்களாக காண்பித்து நீங்கள் HRA க்ளெய்ம் செய்யலாம். அப்படி செய்யும்போது நீங்கள் உங்கள் பெற்றோருக்கு வாடகை கொடுப்பதாக காண்பிக்க வேண்டும். எனினும் நீங்கள் மற்ற வகையிலான வீட்டு பலனை அனுபவித்து வந்தால், HRA க்ளெய்ம் செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்
குழந்தைகளின் கல்வி கட்டணத்தில் வரி விலக்கு
குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்திலும் (Children School Fees) நீங்கள் வரி விலக்கு பெறலாம். உங்கள் குழந்தை ப்ளே ஸ்கூல், ப்ரீ நர்சரி அல்லது நர்சரி என எதில் படித்தாலும் உங்களுக்கு இந்த வசதி கிடைக்கும். வருமான வரி விதியின் 80 இன் படி நீங்கள் இதை பெற முடியும். அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு இந்த வசதி கொடுக்கப்படும்.
மேலும் படிக்க | பிஎஃப் ஊழியர்கள் ஹேப்பி: ‘அபராதம் கட்டுங்க’.. நிறுவனங்களுக்கு கிளாஸ் எடுத்த EPFO
மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்குகள்
உங்கள் பெற்றோருக்கான மருத்துவ செலவுகளுக்கும் (Medical Expenses) நீங்கள் வரி விலக்கு பெறலாம். எனினும் இந்த வரி விலக்கை பெற உங்கள் பெற்றோர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகள் வரும். இந்த செலவுகளுக்காக நீங்கள் வரி விலக்கு கோரலாம். வருமான வரி விதியின் (Income Tax Act) பிரிவு 80D இன் கீழ் இந்த விலக்கு கோரப்படுகிறது. இதன் கீழ் நீங்கள் அதிகபட்சமாக ரூ.50,000 வரை வரி விலக்கு (Tax Exemption) கோரலாம்.
காப்பீட்டுக்கான வரி விலக்கு
இவை தவிர உங்கள் பெற்றோருக்காக நீங்கள் எடுக்கும் சுகாதார காப்பீட்டின் (Health Insurance) மூலமும் வரியை சேமிக்கலாம். சுகாதார காப்பீட்டு பிரீமியத்திலும் உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். உங்கள் பெற்றோர் 65 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் 25 ஆயிரம் வரையிலான காப்பீட்டு பிரீமியம் வரை வரி விலக்கு கிடைக்கும். உங்கள் பெற்றோரின் வயது 65 அல்லது அதற்கு மேல் இருந்தால், 50,000 ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கலாமா? புதிய விதிகள் கூறுவது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ