நாட்டில் மொத்த தொற்று ( Corona Virus) பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,71,624 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1,61,552 என்ற அளவை எட்டியுள்ளது.
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 46,951 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதில் மகாராஷ்டிராவில் மட்டும் 30,535 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கோவிட் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கும், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கோவிட் நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.
நிறுவனம் அதன் வருவாய் கடந்த ஆண்டை 326 சதவீதம் உயர்ந்து, 2.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அறிவித்தது. கடந்த காலாண்டில் செயலியின் விற்பனை 369 சதவீதம் அதிகரித்து 882.5 மில்லியன் டாலராக இருந்தது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்திகளை வெளியிட்டதாக கூறி பிபிசி உலக் தொலைகாட்சி ஒளிபரப்புக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வைரஸ் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் கொரோனா வைரஸ் உருவானது என்றும் சீனா திட்டமிட்டு வைரஸை பரப்பியுள்ளது என்று குற்றச்சாட்டுகள் உலகெங்கிலும் எழுந்தன.
மாநிலத்தில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பெயர்களை உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை என்றால், அவர்கள் இனி முன்னுரிமை பட்டியலில் இருக்க மாட்டார்கள்.
கொரோனா காலத்தில் இந்தியாவில் வென்டிலேட்டர்கள் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில், மருத்துவ சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு எளிதில் கடன்கள் கிடைப்பது மற்றும் நீண்டகால மெச்யூரிட்டி ஆகிய வசதிகளை அரசாங்கம் அறிவிக்கக்கூடும்.
உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ள, கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது 2021 பிப்ரவரி 28 வரை நடைமுறையில் இருக்கும்.
இந்திய ரயில்வேயில் சேவையில், ஒவ்வொரு மாதமும் ரயில்களின் எண்ணிக்கை 100-200 என அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும், ஐ.ஆர்.சி.டி.சியின் (IRCTC) மூலம் பதிவு செய்யப்படும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைவாகவே உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டது என்ற நம்பிக்கை வலுவடையும் விதமாக, சென்ற மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.15 கோடியை தாண்டியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.