தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு கழக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் கடந்த வாரம் சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது.
எடப்பாடி கே. பழனிசாமி, அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் அராஜகப் போக்கை திமுக அரசு நிறுத்த வேண்டும் என என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று திமுக அரசுக்கு எதிராக அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
எங்கள் ஆட்சிக்காலத்தில் துவக்கபட்ட ஒரு நிறுவனத்தை தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் திமுக பேசுவது ஏற்புடையதல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக அரசியல் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு திருவிழா என்பது அனைவருக்கும் தெரியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் ஏமாற்றுவதும், சாதாரணமாக இருப்பவர்கள் சாதித்துக்காட்டுவதும் இங்கே வாடிக்கையான விஷயம்தான்.
அதிமுக உறுப்பினர்களுடன் சசிகலா நடத்தும் தொலைபேசி உரையாடல்களை வெறும் "நாடகம்" என்று குறிப்பிட்டதுடன், ஒரு குடும்பத்தின் விருப்பங்களுக்காக கட்சி தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்று அதிமுக கூறியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஒரு உள்ள ஒரு கிராமமே கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் பல இடங்களில் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பலவகைப்பட்ட மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. முன்னெப்போதும் கண்டிறாத அளவுக்கு ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சந்தைகளில் பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மாநிலப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோரிக்சா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களையும், வேட்பாளர் விவரங்களையும் பொது மக்கள் பதிபிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு வேட்பாளரின் பக்கம் ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்யப்படும்போதும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
செந்தாமரை மற்றும் இன்னும் பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தமிழகத்தில் "அரசியல் நோக்கத்துடனான பண விநியோகத்தை" பரிசோதிக்கும் நோக்கம் கொண்டவை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வட்டாரங்கள் தெரிவித்தன.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பல விதங்களில் மாறுபட்டுள்ளது. பல புதிய பெயர்களும் புதிய கட்சிகளும் அரசியல் அரங்கில் நுழைந்துள்ள காரணத்தால், இந்த தேர்தல் பல சுவாரசியங்கள் நிறைந்ததாக உள்ளது.
சி.என்.அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது போல, முன்னாள் முதலமைச்சர் ஜே.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தான் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் கே.பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியிலும், கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து கண்ணூரில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியிலும், தான் வசிக்கும் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலும் பத்மராஜன் போட்டியிடுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.