நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார் டாடா ஆல்ட்ரோஸின் புதிய மின்சார பதிப்பில் வேகமாக செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில், மின்சார வாகனங்கள் மிகப்பெரிய மாற்றாக அமைகின்றன. மின்சார வாகனங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. மின்சார பைக்குகள் மற்றும் மின்சார கார்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இப்போது மின்சார வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
எங்கள் ஜப்பான் தலைமையகத்தில் நாங்கள் ஏற்கனவே மின்சார வாகனங்களுக்கான ஒரு பிரத்யேக குழுவைக் கொண்டுள்ளோம். இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மின்சார வாகன தளத்தில் பணியாற்றி வருகிறோம் என்று யமாஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது மின்சார ஸ்கூட்டர் 10 தனித்துவமான மற்றும் துடிதுடிப்பான வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்கெல்லிங் தொடர் சைக்கிள்கள் GoZero வலைத்தளம் மற்றும் பல ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனையில் உள்ளன. ரூ. 2999 அட்வான்ஸ் தொகையை அளித்து ஸ்கெல்லிங் லைட்டை முன்பதிவு செய்யலாம்.
நீங்கள் ஒரு வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கத்தின் Fame 2 கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, மின்சார வாகனம் வாங்குவோருக்கு அரசாங்க மானியம் கிடைக்கும்.
ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கிய முதல் 24 மணி நேரத்தில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்கூட்டருக்கான முன்பதிவை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓலா மின்சார ஸ்கூட்டர், உலக அளவில் மிக அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டராகி உள்ளது.
மின்சார வாகன பிரியர்கள் நீண்ட காலமாக காத்திருந்த தருணம் வந்துவிட்டது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஓலா மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தியை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது. இந்த நிலையில், ஓலா எலக்ட்ரிக் இப்போது அதன் முதல் மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளைத் துவகியுள்ளது.
இந்தியாவில் பிரபலமான RV400 எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை ரிவால்ட் மோட்டார்ஸ் வியாழக்கிழமை (ஜூலை 15) தள்ளுபடி விலையுடன் மீண்டும் துவக்கியது. முந்தைய விற்பனையில், ரெவால்ட் மோட்டார்ஸ் ரூ .50 கோடி மதிப்புள்ள Revolt RV400 ஐ விற்றதாக நிறுவனம் கூறியது.
Best Electric Cars in India: இந்தியாவில் போக்குவரத்துத்துறையில், புதைபடிவ எரிபொருளிலிருந்து மின்சார வாகனங்களுக்கான மாற்றம் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் வகையில் பல அட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் மின்சார மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன.
எலக்ட்ரிக் கார் அல்லது எஸ்யூவி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, உத்தரவாதம், இலவச சேவை, சாலை தள உதவி உட்பட பல நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.
BMW Motorrad சில ஆண்டுகளுக்கு முன்பு CE 04 இன் கான்செப்ட் லிங்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு தயாராக இருக்கும் அதன் பதிப்புகளையும் முன்வைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.